சியாச்சின் பனிமலையில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் மரணம்!சியாச்சின் பனிமலையில் இருந்து மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா,  டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று காலை  உயிரிழந்தார்.

உடல்நிலை மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நிமோனியா தாக்குதல் இருந்தது. இதனால்  சிறுநீரகம் , கல்லீரல் போன்றவை செயல் இழந்தன. தொடர்ச்சியாக அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வந்துள்ளன. எனினும் மருத்துவர்கள் அவரது உயிரை காப்பற்ற தீவிரமாக போராடி வந்தனர். சிகிச்சை பலனளிக்கவில்லை. கோமா நிலையில் இருந்த அவர்,இன்று காலை  11.45 மணியளவில்  இறந்து விட்டதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி சியாச்சின் அவலாஞ்சியில் நடந்த பனிச்சரிவில் சிக்கிய ஹனுமந்தப்பா  6 
நாட்களுக்கு  பிறகு  பிப்ரவரி 8ஆம் தேதி  உயிருடன் மீட்கப்பட்டார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லி ராணுவ ஆராய்ச்சி மைய மருந்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார். 
மரணமடைந்த ஹனுமந்தப்பாவுக்கு மகாதேவி என்ற மனைவியும் குழந்தையும் உள்ளது. கர்நாடகத்தை சேர்ந்தவர்.  19 பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பாக சியாச்சின் அவலாஞ்சியில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடந்த பனிச்சரிவில் 9 ராணுவ வீரர்கள் பலியாகி விட ஹனுமந்தப்பா சுமார் 25 அடி ஆழத்தில் புதைந்து கிடந்தார். 
மெட்ராஸ் ரெஜிமென்டில் கடந்த 2002ஆம் ஆண்டு ஹனுமந்தப்பா இணைந்தார்.  கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான் பணி புரிந்து வந்தார். ஹனுமந்தப்பா உயிரிழந்ததையடுத்து  அவரது சொந்த கிராமமான தர்வாட் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது