திமுக கூட்டணியில் இணைந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சட்டசபை தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவ காதர் மொகிதீன் இதனை அறிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றது.இதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினர். 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிப்பதாக கருணாநிதி கூறியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.மேலும் 12 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை திமுக நிறுத்த வேண்டும் என்றும் கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டதாகவும் காதர் மொகிதீன் கூறினார்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

3 comments:

 1. கடந்த பாராளுமன்றத்திற்கு மேலும் அதே வேலூரை மட்டும் ஒதுக்கி கொடுத்து தி மு க இதே இந்தியா யூனியன் முஸ்லிம்லீக்கைத்தான் இத்தோடு வேலூரை விட்டு ஓரம் கட்ட வேண்டும் என்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காட்பாடியை தலையிடமாக கொண்ட துரை முருகன் தலைமையில் ஒரு கூட்டம் திட்டம் தீட்டி இந்தியா யூனியன் முஸ்லிம்லீக்கை வேண்டு மென்றே தோல்வி அடைய செய்தார்கள்.

  இன்னும் ஒன்றும் குறைந்துவிடவில்லை முடிந்த அளவு குறைந்த பட்சம் ஒரு நாடாளுமன்றத்தின் 6 சட்டசபை தொகுதிகளை யாவது பெற முயற்சி செய்யுங்கள் கொஞ்சம் அசந்தால் எல்லோருக்கும் சீட்டை கொடுத்துவிட்டு இடம் கூட்டணியில் இடம் கிடைக்கதவர்களுக்கு என் இதயத்தில் மட்டுமே இடம் என்று நாசூக்காக சொல்லிவிடுவார் கலைங்கர் கருணாநீதி.

  ReplyDelete
 2. இணைந்ததா...?? எப்போது இணைந்தது?? ஒரே குழப்பமா இருக்கே..
  காலம் காலமாய் தி.மு.க கட்சியில் தானே அவர்கள் அங்கம் வகிக்கிறார்கள்..
  ஓஹோ... விளம்பரமோ...

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது