அதிரை பேரூர் மன்ற உள்ளிருப்பு போரரட்டம் - ஏலம் எதிர்பாளர்களுக்கு சாதகம் !

அதிரை பேருந்து நிலைய கடைகள் ஏலம் நிர்ணைய தொகை தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்ட தொடரில் சலசலப்பு ஏற்பட்டு கூட்டம் தொடர முடியாமல் போனது .சமிபத்தில் பேரூர் நிர்வாகம் பேருந்து நிலைய கடைகளை பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட முடிவு செய்து வருகின்ற  25 ஆம் தேதி கடைகளுக்கு ஏலம் நடைபெறும் என அறிக்கை தந்தது .இது தொடர்பாக தொகை நிர்ணயம் செய்வது தொடர்பாக கடந்த 12 ஆம் தேதி பேரூர் உறுப்பினர் கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் 10,11,17,19 வார்டு உறுப்பினர்கள் எங்கள் வார்டுகளில் முறையாக பணிகள் நடை பெறவில்லை என்று கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்த பொழுது மனிதேய நேய மக்கள் கட்சியை சேர்ந்த  நபர்கள் மன்ற கூட்டத்தின் முன்பு உள்ளிருப்பு போரரட்டம்  செய்தனர் .

இதனால் மன்ற கூட்டம் முழுமையாக நடைபெற முடியாத நிலையில் முடிந்தது .இதனால் ஏலம் நடைபெறுமா  என கேள்வியில் நிற்கும் அதிரை தொழில் முகவர்கள் .ஊரின் உள்ள தொழில் செய்யும் நபர்களுக்கு இந்த ஏலம் மிக முக்கிமானதாக கருதப்பட்டது .ஆர்ப்பட்டகரர்கள் முதலில் ஊரின் நலனை கருத்தில் கொண்டு ஏல நிர்ணைய  கூட்டத்திற்கு  ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும் என்றும் பிறகு வார்டு பணிகள் கூறித்து பேசி இருக்கவேண்டும் என்பது மக்களின்  கருத்தாக இருந்து வருகிறது..மக்களின் நலனில் அக்கறை காட்டும் நீங்கள் ஊரில் நலனை பார்க்க தவறினர் .ஏலம் நடக்க விடாமல் சில அரசியல் பிரமுகர்கள் முயற்சி எடுத்து கொண்டு இருக்கும் வேளையில் ம ம க கட்சியினர் செய்த உள்ளிருப்பு போரரட்டம் ஏலம் எதிர்பாளர்களுக்கு  சாதகமாக அமைந்து விட்டதே மறுக்க முடியாத உண்மை.நடந்த உள்ளிருப்பு போரரட்டம் புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு பெரும் இடையுறு  ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது  .

ஊரின் நலனுக்காக மீண்டும் ஏலம் நடக்குமா ? அதற்க்கு ம ம க கட்சி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா ? பொறுத்திருந்து பார்போம் .


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது