இணையதள சேவைக்கு வெவ்வேறான கட்டணம் வசூலிக்க தடை; இணைய சமநிலைக்கு ஆதரவாக ‘டிராய்’ உத்தரவு. ..!!!

இணையதளத்தில் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வெவ்வேறு கட்டணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விதிப்பதை தடை செய்து ‘டிராய்’ உத்தரவு பிறப்பித்துள்ளது.கட்டண வசூல்‘இணையதள சேவைகளுக்கு வெவ்வேறுவகையான கட்டணங்களுக்கு தடை விதித்தல்’ தொடர்பான புதிய உத்தரவு ஒன்றை இந்தியதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம் (டிராய்) நேற்று பிறப்பித்தது. அதில், இணைய சமநிலைக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் இணையதளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக வெவ்வேறுவகையான கட்டணங்களை வசூலிக்கக்கூடாது. சலுகைகளையும் அறிவிக்கக்கூடாது. இந்த உத்தரவில் குறிப்பிட்டதற்கு எதிராக எந்தவகையானஒப்பந்தத்தையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியாரிடமோ, மற்ற நிறுவனங்களிடமோ மேற்கொள்ளக்கூடாது.இந்த உத்தரவுக்கு முரணாக ஏற்கனவே பின்பற்றி வரும் திட்டங்களை 6 மாத காலத்துக்குள் வாபஸ் பெற வேண்டும்.நெருக்கடியான சமயங்களில் அவசர சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கட்டண குறைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இந்த நெறிமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீறும் பட்சத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உத்தரவை ‘டிராய்’ நிறுவனம் மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது