காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது விழா

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று 25-02-2016 காலை 11 மணியளவில் கல்லூரியின் கலையரங்கில் மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அறிமுக உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாகர்கோவில் கலாசாரப்பள்ளி இமாம் மவ்லவி எம்.ஏ ஷவ்கத் அலி உஸ்மானி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் கிராத் ஓதி, அதன் விளக்கத்தை தமிழில் கூறினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை சாபீரா பேகம் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. கலீல் ரஹ்மான் அவர்களால் நன்றி கூறினார்.

விழாவில் நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களைப்பற்றி கல்லூரியில் நடந்த சிறப்பு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், இஸ்லாமிய மார்க்க நூல் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர், பேராசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

நன்றி 

அதிரை நியூஸ்

Share:

1 comment:

  1. மீலாது விழா யாருக்கு?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது