இரவிலும் அதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம் தீவிரம்! (புகைப்படங்கள் மற்றும் வீடியோ)அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவரை கண்டித்து  மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

19வது வார்டு மற்றும் 17வது வார்டு பேரூராட்சி நிர்வாகத்தால்  தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை பேரூர் நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றும் பலன் அளிக்காத காரணத்தினால். இன்று நடைபெற்ற மன்ற கூட்டத்தை புறகணிப்பு செய்வதோடு மன்ற வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் கோஷா அணிந்த பெண் கவுன்சிலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது குறித்து 19வது வார்டு பெண் கவுன்சிலர் சவுதா அவர்களின் கணவர் அஹமது ஹாஜா கூறுகையில்

அதிரையில் நடைபெற்ற  உள்ளூராட்சி தேர்தலில் அதிமுகவின் செயலாளர் பிச்சையை துணை தலைவராக்குவதற்க்கு மமகவின் பெண் கவுன்சிலர்களின் வாக்கு தேவை ஆனால் இன்று நம்மை புறந்தள்ளிவிட்டு பேரூர் மன்ற தலைவரின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் மன்ற தலைவர் அஸ்லம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்றார்.

இரவுநேரமாகியும் போராட்டக்காரர்கள் களைந்து செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தை செய்துவருகின்றனர். மேலும் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வராமல் தடுக்க போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

1 comment:

  1. ஏன் ம ம க உங்களுக்கு அதிரைலே ஆளே இல்லையா போராட்டம் பண்ண மதுக்கூர் அலுகளைலாம் கூப்புட்டு இருகிங்கே உங்கா கடைலே ஆளே இல்லே யாருக்கு பா டீ ஆதுரிங்க ./........ம ம க சேர்ந்த இல்லே சங்க சார்பாக கெஞ்சி உருபினறன உங்க கௌன்சிளர் என்னப்பா செஞ்சாரு 19 வார்டு க்கு அங்கு இருக்கிற குலத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தது யாரு ? வெளிய வராம ஊட்டுகுல்லையே இருந்து ட்டு அது பண்ணலே இது பண்ணலே இன்னு சொல்றந்து அரசியல் நாடகம் ,,,,போக பொய் நல்ல ஆளே வச்சி போராட்டம் பொண்ணுக

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது