நம்ம தொகுதி திமுகவுக்கு சாதகமாமே-ஒரு க க சர்வே சொல்லுது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அணைத்து கட்சிகளும் அவர்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.இந்நிலையில் தேர்தல் சார்வேயும் அவர்களது பங்குக்கு மக்களிடம் கருத்து கணிப்புகளைகேட்டறிந்து  வெளியிட்டு வருகிறது ஊடகத்துறை.இந்த சர்வேகள் சில கட்சிகளை குளுரும் படியும் சில கட்சிகளை வருத்தத்தில் ஆழ்த்தும் படியும் அமைவதுசார்வேகளின் இயல்பு தன்மை.அந்த வகையில் திமுக கூட்டணி இப்படி வைத்தால் அபார வெற்றி பெரும் என்று நமது அடையாளம் என்கின்ற இதழ் ஒரு சர்வேயினை வெளியிட்டது.
அவ்வகையில் திமுக,காங்கிரஸ்,தேமுதிக,மற்றும்ஒரு  முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்தால் 201 இடங்கள் கைப்பற்றும் என்று சர்வே வெளியிட்டு உள்ளது.இந்நிலையில் திமுகவுக்கு சாதகமான தொகுதியாக தஞ்சாவூர்,பட்டுகோட்டை,உட்பட 100க்கும் அதிகமான  தொகுதிகள் திமுக வுக்கு சாதகமான பகுதி  என்று அந்த சர்வேயில் கூறப்பட்டு உள்ளது.இந்த சர்வே ரிசல்ட் திமுக தலைமைக்கு மிகுந்த குஷியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் திமுகவின் கோட்டை என்று சொல்லபடுகிற ஊர்களில் பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் திமுகவின் கோட்டை  என்று அக் கட்சியினரால் கூறபடுவது குறிப்பிடத்தக்கது.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது