ஜெ.வை மதசார்பற்றவர் என்று புகழ்ந்து தள்ளிய ஜவாஹிருல்லா

ஜெ.வை மதசார்பற்றவர்  என்று புகழ்ந்து தள்ளிய ஜவாஹிருல்லா
1969ல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை, முந்தைய அதிமுக அரசு 2001ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15-11-2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக திமுக அரசால் அறிவிக்கப்பட்டது.2001ல் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தினை 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ரத்து செய்தது.பிற்படுத்தப்பட்டோர்க்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக் கெனத் தனியே 3.5 சதவீத இட ஒதுக்கீடு 2007 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக 2011ல் ஆட்சிக்கு வந்ததும் இதை முடக்க பல்வேறு உள்ளடி வேலைகளை செய்தது. பின்னர் இஸ்லாமிய இயக்கங்களின் போராட்டத்தால் அதை கைவிட்டது.ராமருக்கு கோவில் அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என்று முதல்வர்கள் மாநாட்டில் கேட்டவர் தான் ஜெயலலிதா கேட்டதோடு மட்டுமல்லாமல் ஆயிரம் தொண்டர்களை கரசேவைக்கு அனுப்பிவைத்தவர்.

பாபர் மசூதி இடிப்புக்காக அத்வானியும் ஜோஷியும் கைது செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றவுடன் முஸ்லிம்களுக்கு கொண்டுவந்த 4.5% இடஒதுக்கீட்டை எதிர்த்து அறிக்கை விட்டார் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா."பெரும்பான்மை சமூகத்தைவிட சிறுபான்மை சமூகம் அதிக பலனை அனுபவிப்பதாக" ஆர்.எஸ்.எஸ் கூறும் அதே கூற்றை நாகூசாமல் கூறினார் ஜெயலலிதா... இதற்காக ஜெயலலிதாவை எதிர்த்து அப்போது சென்னையில் தமுமுக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதுகுஜராத் கலவரத்திற்கு பிறகு மோடியை பலரும் ஓதுக்கிவைதிருந்த போது தாமாக சென்று அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்னவர்.
இதையெல்லாம் நன்கு உணர்ந்துதான் பாஜக மூத்த தலைவரான அத்வானி தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அதிமுக நேரடியாகக் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என்றபோதும் பாரதிய ஜனதாவும் அதிமுகவும் இயல்பான கூட்டாளிகள் என்றார்.தான் முதல்வராக பதவியேற்றபோது கூட சிறப்பு விருந்தினராக மோடியைத்தான் அழைத்தார் அம்மையார் ஜெயலலிதா.
மோடி பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு வெளியிட்டபோது முதல் வாழ்த்து செய்தி அனுப்பியது அம்மையார் ஜெயலலிதா தான்.ஜெயலலிதாவை தனியாக சந்தித்து விருந்து சாப்பிட்ட மோடி நேராக சென்று பார்த்தது ஆர்.எஸ்.எஸ் புரோக்கர் "சோ"வைத்தான்.... இதன்மூலம் ஜெயலலிதாவிற்கும் மோடிக்கும் இருக்கும் நட்பு அனைவருக்கும் மிகத்தெளிவாக தெரியும்.இவையெல்லாம் நாம் கண்கூடாக பார்த்துகொண்டிருக்கும்போது நடைபெற்றவைதான்.இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டுத்தான் இன்று ஜவாஹிருல்லா ஜெயலலிதவுக்கு ஆதரவு கரம் தருகிறார் ..!!  

முகநூல் நண்பன்
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

5 comments:

 1. அரசியல் ஆசைகள்

  ReplyDelete
 2. அரசியல் ஆசைகள்

  ReplyDelete
 3. Ethea pol
  matra eslamear
  sonnal. Thagkamudeyathu commens

  ReplyDelete
 4. மானம் கெட்ட அரசியல் நடத்தும் ம.ம.க.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது