மமக தமுமுக அழைக்கிறது

வரும் பிப்ரவரி 7 ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்யகோரி மதுரையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படயுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்களுக்காக அதிரை மமக சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது அனைத்தும் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தக்வாபள்ளிவாசல் அருகே இருந்து புறப்பட்டு செல்லும் என மமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

3 comments:

 1. இது மமக / தமுமுக வினால் நடத்தபடுகிறது, அந்த கட்சியில் உள்ளவர்கள் மட்டும் போனால் போதுமே, எதுக்கு ஊரை அழைக்கணும்? ஊரில் உள்ளவர்கள் எல்லாம் மமக/தமுமுக வா? உங்களுக்கு இஷ்டப்பட்ட வேலையை பார்க்க ஊரை அழைக்காதீங்க.

  ReplyDelete
 2. நம்ம அதிரையில எந்த கட்சி அல்லது இயக்கங்கள் நல்லது செய்தாலும் இங்குள்ள அதிரையங்களுக்கு வக்கனையாய் வாயாடல் மட்டும் தான் விடத் தெரியும்..!


  ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரன் ஆவான் என்பதை Adirai Awesome ஆகிய நீங்கள் இன்னும் அறியவில்லை போலும்..! முதலில் அதனை தெரிந்துக் கொள்ளுங்கள்.


  தலைவர்கள் பிறந்த நாளில் எத்தனை எத்தனயோ சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி அவர்கள் அனைவரும் விசாரணைக் கைதிகளாக தான் சென்றார்கள். இன்னமும் விசாரணைக் கைதிகளாக தான் இருந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

  எந்தத் தவறும் செய்யாமல் விசாரணை என்கின்ற பெயரில் கைது செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் விடுதலை செய்யபடாமல் அப்பாவி முஸ்லிம்கள் தன்னுடைய வாலிபம் ,சந்தோசம் மனைவிமக்களை இழந்து வாடிக்கொண்டிருக்கின்றனர்.

  அதற்காக தான் இந்த போராட்டம்.. தேர்தல் நேரத்திலாவது இந்த கண்டன கோரிக்கை குரல்கள் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் காதுகளில் விழுந்து எத்தனையோ பெண்கள் தங்கள் கணவன்களையும், பிஞ்சுக் குசந்தைகள் தங்களது தந்தைகளையும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஒரு விடிவு கலாம் பிறக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம்..

  உங்களுக்கு மமக / தமுமுகவுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு இருக்குமானால் தாராளமாக நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதனை விட்டு விட்டு ஊரில் உள்ளவர்கள் செல்ல கூடாது என்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.

  நமது குடும்பத்தில் யாரவது ஒருவர் சிறையில் இருந்தால் நமக்கு எப்படி மனது கஷ்டப்படுமோ அவ்வாறு தான் தான் தந்தையை பிரிந்து வாடும் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கும் , அவர்களின் மனைவிமார்களுக்கும்...

  நாளுக்கு நாள் அநீதி இழைக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் எம் சமுதாயத்தை வென்றெடுக்க ஒன்றிணைவோம்..

  ReplyDelete
 3. நாம் அனைவரும் சகோதரன் என்று சொல்லும் நீங்கள் பிரிந்து கிடப்பது ஏன்? நீங்கள் செய்யும் காரியம் நல்லதுதான், அதை எல்லோரும் சேர்ந்து செய்யலாமே? ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு வித விதமான கலரில் கொடிகளை தூக்கிக் கொண்டு அலைவது ஏன்? முதலில் உங்களுக்குள் ஒற்றுமை உள்ளதா?

  என்னுடைய பின்னூட்ட கருத்திற்கு மறுகருத்து இடும் முன் யோசிக்கணும்.

  இசுலாமிய பெயரை தாங்கி இருந்தால் மட்டும் போதாது.

  முதலில் நீங்கள் திருந்துங்கள்.

  நமதூரில் பல பேர் குடும்பங்களை முற்றிலும் பிரிந்து, அந்நிய நாடுகளில் பணத்துக்காக தன் வாழ்க்கையை மறைமுக சிறை வைத்து, குடும்பத்தாரின் நிழல் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கின்றனரே, அவர்களை மீட்பது எப்போது?

  போய் இந்த வேலையை பாருங்கையா.

  வந்துட்டானுக, அரசியல் ஆதாயம் தேட.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது