நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அதிரை எக்ஸ்பிரஸிற்க்கு பேட்டி!!

சீமானின் நாம் தமிழர் கட்சியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் K.கீதா நேற்று மாலை அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தான் போட்டியிடுவதாகவும், தனக்கு அதிரை மக்களின் அமோக ஆதரவு தேவை எனவும் அதிரை மக்களின் நீண்ட நாட்களான பல்வேறு  கோரிக்கைக்காக என்றென்றும் போராடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
கணினி பொறியாளரான கீதா சிறு வயது முதல் சமூக பணிகளில் ஆர்வம் மிக்கவர். தமிழ் பற்று கொண்ட கீதா ஒரு தமிழ் உனர்வாளராக வலம் வருகிறார்.
சாதியில்லா தமிழ் நாட்டை உருவாக்கி மொழிப்பற்று மிக்க சமுதாயத்தை நிலைநாட்டி தமிழனை தமிழனே ஆளவேண்டும் என்ற சீமானின் கொள்கை முழக்கதுடன் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக நம்மிடையே தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அதிரை எக்ஸ்பிரஸ் ஹசன், தலைமை நிருபர் அஸ்ரப், மற்றும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பங்களிப்பாளர்கள் செம்பலூர் இரா.சதிசு , இரா. செல்வமனி, ஜெ.முஹம்மது யுசுப், அன்சாரி ஆகியோர் உடனிருந்த்தனர்.
இறுதியில் மனிச்சுடர் சாஹுல் ஹமிது அவர்கள் கீதா அவர்களுக்கு திருக்குர்ஆன் தர்ஜுமாவை வழங்கினார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது