ஜெ -பர்த் டே, களைகட்டும் இலவச மருத்துவ முகாம்கள்


தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின்  பிறந்தாளை இன்று கொண்டாடும் விதமாக தமிழகம்   முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 680 இலவச மருத்துவ சிறப்பு முகாம்கள் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக அதிரை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிறப்பு முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூர் மன்ற துணை தலைவர் பிச்சை,அதிமுக துணை  செயலாளர்  தமீம், ஹாஜா மொய்தீன் மருத்துவர்,கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், ஹாஜா முஹைதீன், அதிமுக பிரமுகர்கள்  ஹாஜா பகுருதீன் , அபூ தாஹிர், லியாகத் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  


-அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது