நாங்க ஆட்சிக்கு வந்தால் ?? இது தரமாட்டோம்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியின் இணையதளத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துவங்கி வைத்தார். குறைந்தபட்ச செயல்திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பெற்றுக் கொண்டார்.

--------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் பாமக ஆட்சி ஏற்பட்டதும், மக்களுக்கு இலவச பொருட்களைத் தரமாட்டோம், ஆனால் அதற்கு பதில் இலவச கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்குவோம் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் மகளிர் தொண்டு நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் எம்.ஜி.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


நீங்க யாரு ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு எது தரிங்களோ இல்லையோ  மனசாட்சி பயந்து நீங்க ஒழுங்கா நல்லாட்சி செஞ்சாலே போதும்.

-

--அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது