சி.எம்.பி.ரோடு போட்டாச்சுங்க!

பல வருடங்களாக சிதிலமடைந்து போயிருந்த சி.எம்.பி.ரோடு நேற்று 06/02/2016-சனிக்கிழமை முழு மூச்சோடு போட்டு விட்டனர், வண்டிப்பேட்டை பட்டுக்கோட்டை இணைப்பு சாலையிலிருந்து வி.கே.எம்.ஸ்டோர் முக்கம் வரைக்கும்.

இந்த தார் சாலையைப் பற்றி பல பேர் பலமாதிரி சொன்னனர். ஆனால், பணியாளர்கள் காதில் கேட்டுக்கொண்டே வாய் திறக்காமல் அவர்கள் வேலையை செம்மையாக முடித்தனர்.

கடந்த சிறிது காலம் இப்பகுதி மக்கள் செவ்வதிரையர்கலாக மாறிப் போய் இருந்தனர், அதுவும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய், முற்றிலும் இல்லாமல் இருக்கும்.

 K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

2 comments:

 1. ஆம் இப்ப பார்க்க கருமையாய் அழகாய் இருக்கிறது. ஆனால்!

  பாதி பகுதி முழுமையாய் உடைத்து பெருஞ்சல்லி முதல் செம்மன் வரை போட்டனர், இதில் பல இடங்களில் செம்மண் சரியாக இடாமல் கற்கள் தொடர்ந்து பெயர்ந்து வந்தது. மெம்பர் இப்ராகிம் சொன்னபடி இன்னொரு லேயர் உயரமாக போடவில்லை. அப்படியே கூட்டி விட்டு கடலைமிட்டாய் சைசுக்கு தார் ரோடு போட்டு விட்டனர்.

  மீதி பாதி பழைய உடைந்தும் உடையாமலும் இருந்த ரோட்டை கூட்டி விட்டு ஆங்காங்கே ஒட்டு வேலை பார்த்து மேலே தாரை தெளித்து கடலை மிட்டாய் சைசில் கருஞ்சாலை போட்டு விட்டனர்.

  இப்படி பலஹீனமாய் போட்ட ரோட்டுக்கு கேரன்டி 6 மாசமோ ஒரு வருசமோ மட்டும் இருக்கும். இப்பகுதியில் ஓட்டு வாங்கி மீண்டும் இந்த பகுதிக்கு நவம்பரில் புது மெம்பர் வருவார். அவரிடம் இந்த ரோட்டை சீர் செய்ய சொன்னால் இது யூனியன் பகுதி என்று சொல்லி கை விரிப்பார். இது தான் மீண்டும் நடக்கும்.

  ReplyDelete
 2. Assalamu Alaikkum.
  Good to know. Roads are improved in all areas of Adirampattinam.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது