5 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை லெவன் அணியை இறுதி சுற்றுக்கு அழைத்து சென்ற அதிரை வீரர்


அதிரை சி எம் பி   தெருவை சேர்ந்தவர் இஷாக்.இவர் சென்னையில் அமைந்து உள்ள புஹாரி ஆலிம் கல்லூரியில்  மார்க்க கல்வியுடம் கூடிய உலக கல்வியும் பயின்று வருகிறார். இவர் அதிரையில் இயங்கி வரும் AFCC கிளப்பில் கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில் சென்னை மெரீனா மர்வெல் கிளப் சார்பில் நடைபெற்று வரும் 20/20 கிரிக்கெட் போட்டியில் சென்னை லெவன் பாய்ஸ்  அணிக்காக விளையாடி வருகிறார் இஷாக்.இன்று காலை மெரீனா மர்வெல் அணியுடன் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் மூன்று ஓவர் பந்து வீசி 8 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை 11 பாய்ஸ் அணி இறுதி சுற்றுக்கு முன்னேற பெரும் உதவியாக இருந்தார். 

ஆட்ட நேர முடிவில் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்த இஷாக் அவர்களுக்கு ஆட்ட நாயகன் விருந்து வழங்கப்பட்டது.சென்னை 11 பாய்ஸ் அணி 100 ரன்களும், மெரீனா மர்வெல் அணி 55 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

1 comment:

  1. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அறிமுகத்துக்காக இவர் தந்தை பெயரிட்டால் நன்று

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது