அதிரைப் பெண்களே, நீங்கள் தாய் வீட்டை விட்டு விட்டு, மாமியா வீடு போக தயாரா?


எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.

அதே போல்தான், சமீனா பாத்திமாவின் பெற்றோரும் விரும்பினார்கள், அதற்கு ஏற்றார் போல் மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர்.

நல்ல மாப்பிள்ளையை பார்த்து விட்டனர், படித்த மாப்பிளை, நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், மார்க்க நெறிகளில் வழி தவறாது வாழும் நல்லுள்ளங்கள், மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, இரு குடும்பங்களுக்கும் மனதார  பிடித்தும் போனது,

மணமகன் மணமகள், இரு வீடுகளும் தங்கள் குடும்பத்தார்களிடம் கலந்துகொண்டு உடனே நிச்சயம் செய்துவிட்டனர், திருமண நாளும் முடிவாகி விட்டது.

மாப்பிள்ளை வீட்டார் 100%சதவிகிதம் மஹருக்கு அந்தப் பெண்ணை தங்கள் மகனுக்கு திருமணம் முடித்துவைக்க ஆசைப்பட்டனர், பெண் வீட்டாரிடம் ஒரு துரும்பு பொருள்கூட மாப்பிள்ளை வீட்டார் எதிர் பார்க்கவில்லை.

உங்கள் மகள் சமீன பாத்திமா, எங்களுக்கு மருமகளாக, எங்கள் மகனுக்கு மனைவியாக எங்கள் வீட்டில்தான் வசிக்கணும், எந்த ஒரு சீர் சீராட்டும் நீங்கள் செய்யக்கூடாது.

வீடு, நகை அது இது, தோழன் சாப்பாடு, மற்ற சாப்பாடு, கல்யாண சிலவு எல்லாமே நாங்களே பார்த்துக் கொள்கிறோம், தலைப்பிரசவம் சம்பத்தப்பட்ட மருத்துவ சிலவு கூட நாங்கள்தான் பார்த்துக்குவோம், இது மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பம், இதற்கு பெண் வீட்டாரும் முழு மனதோடு சம்மதித்து விட்டனர்.

திருமண நாள் முடிவு செய்ததில் இருந்து சமீனா பாத்திமாவுக்கு ஒன்றும் ஓடவில்லை, திருமண நாள் நெருங்க நெருங்க அவள் மனதில் ஒரே பதட்டம், என்னவென்று சொல்லமுடியாத நிலையில் மனதளவில் உருகினாள்.

இருவர் வீட்டிலும் திருமண வேலைகள் துரிதமாக நடந்தேறியது. நாளை திருமணம், சமீன பாத்திமா லேசாக அவள் வீட்டை சுற்றி சுற்றிப் பார்த்தாள், தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று மனதில் நினைத்து நினைத்து மனம் கனத்துப் போனாள்.

ஆனால் அன்று ஏதோ ஒன்றை நான் இழக்க போகிறேன் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் கல்யாண வேலையில் மும்முரமாக இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரிந்த கண்களோடு தான் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்தாள், தான் அன்போடு வளர்த்து வந்த சில பூச்செடிகளையும், செவ்வாழை மரத்தையும்  பார்த்தாள்,  கண்களின் ஓரத்தில் நீர் துளி ததும்பியது, சொட்டியது.

சிறிது நேரத்தில் தங்கச்சி ஆமினா பாத்திமா, சமீனா பாத்திமாவை பார்த்ததும் என்ன ஆச்சு ராத்தா, நல்ல நாளும் பெரிய நாளும் ஏன் ஒரு மாதிரியாக இருக்கின்றாய் என்றாள் தங்கச்சி.

இப்போ இரண்டு நாளா நீ என்கிட்டே சரியாவே பேசவே இல்லை, ராத்தா இங்க பாரேன் என்றவள், ராத்தாவின் கண்களில் இருந்து நீர் ததும்புவதை கண்டு தானும் அழுதாள்.

பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் தங்கச்சி, வாப்பா எனக்கு எது வாங்கினாலும், போட்டி போட்டுக்கொண்டு தனக்கும் அதுமாதிரி வாங்கித் தரனும் என்று வாப்பாவிடம் அடம்பிடிக்கும் தங்கச்சி, அதனால் எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகள்.

இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று கண் கலங்கினாள் சமீனா பாத்திமா.

அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது, ஓடி சென்று அடுப்பை அனைத்து உம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும், உம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

வாப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே வாப்பா மகளைப் பார்த்தார், ம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து ம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் போய் உட்கார்ந்தாள்.

தோழிகளோடு படித்த நாட்களை, தோழிகளோடு விளையாடிய நாட்களை, தோழிகளோடு உணவருந்திய நாட்களை நினைத்து நினைத்து விம்மினாள்.

அந்த நேரத்தில், வெளியிலிருந்து வந்த சமீனா பாத்திமாவின் உம்மம்மா, அடியே சமீனா உள்ள போ, நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் உம்மம்மா.  

உம்மம்மாவிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று உம்மாம்மா சொன்னதை கேட்காமல் உம்மாம்மாவையே பார்த்தாள், சமீனா பாத்திமாவின் முகம் அப்படியே அழுவது போல மாறியது.

உம்மாம்மா உடனே என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் உம்மா வாப்பா என்று கத்தினால் எல்லோரும் என்னமோ ஏதோ என்று பதறிக்கொண்டு பயந்து ஓடி வந்தனர்.

உடனே சமீனா பாத்திமா, உம்மா நான் மாமியா வீட்டுக்கு போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன், உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், மாமியா வீடு எப்படி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று கலகலவென்று அழுதாள், உடனே வாப்பாவின் மனமும் உம்மாவின் மனமும் அழுதது, உம்மம்மா சமாதனம் சொன்னாள்.

வாப்பாவுடன் மகள் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும், வாப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது.

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், ராத்தா நீ அழாதே, மாமியா வீடு உன்னை  நல்லாதான் பார்த்துக்குவாங்க ராத்தா, என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்.

அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் உம்மா, ஆனால் சமீனா பாத்திமா மனம் புண்பட்டு போயிருந்தாள்... நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது.. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் பிரிந்து செல்லப் போகிறாள்... என்பது மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

“திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் அதுவே ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்....

“பெண் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு வீட்டில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம்.

அதிரைப் பெண்களே, நீங்கள் தாய் வீட்டை விட்டு விட்டு,
மாமியா வீடு போக தயாரா?அல்லாஹ் ஆணையிடுகின்றான்:
நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)

மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25)

மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:20)

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

7 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. படித்தவர் கண்களையும் சிறிது கசியவைத்துவிட்டு இப்படி ஒரு கேள்விகேட்டால் கேள்விக்கு பதில் கேள்விதான் வரும். நாங்கள் வரத்தயார். ஆனால் எங்களைப்பரிவுடனும் பாசத்துடனும் நடத்த மாப்பிள்ளைவீட்டார் தயாரா என்பார்கள்

  ReplyDelete
 3. உள்ளூரில் சம்பந்தங்கள் பேசி முடிப்பதால் அதிரை பெண்களுக்கு மாமியாவீடும் உம்மாவீடும் ஒரு Walking distance தான்.But never at all.....????

  ReplyDelete
 4. PPO KALAM PURAUM GENTS ANAIVARAIM ADIYAMAYAHA IRUKKA KATTURAIYALAR VIRUMBUHIRARA

  ReplyDelete
 5. ஏற்கனவே இருந்த கொடுமை பத்தாது என்பது போல காலம் முழுவதும் ஆண்கள் அடிமையாக இருப்பதற்கு கட்டுரையாளர் விரும்புகிறாறோ இந்த கட்டுரை வன்மையாக கண்டிக்கதக்கது.

  ReplyDelete
 6. ஏற்கனவே இருந்த கொடுமை பத்தாது என்பது போல காலம் முழுவதும் ஆண்கள் அடிமையாக இருப்பதற்கு கட்டுரையாளர் விரும்புகிறாறோ இந்த கட்டுரை வன்மையாக கண்டிக்கதக்கது.

  ReplyDelete
 7. நம் ஊரில் பெண்கள் திருமண இத்ிருக்கு பிறகு மாமியார் வீடு செல்வதுதான் மாப்பிள்ளைக்கும் அந்த மணமகளுக்குஇம் சிறப்பு.

  நமதுரில்இன்ஷா அல்லாஹ் இந்த பழக்கத்தை கொண்டு வரணும்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது