பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி ? ஜவடேகரைசந்தித்தார் சரத்குமார் !

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகபொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ்ஜவடேகர், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர்,
சென்னையில் சரத்குமாரை சந்தித்தனர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்குமாறு, சரத்குமாருக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை சரத்குமார் ஏற்றுக் கொண்டார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இதுவரை இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகியதாக
அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனாலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. இந்த சூழலில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்துள்ளார். தேசிய
ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிகட்சி ஏ.சி.சண்முகம், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்சதக்கத்துல்லா, இந்திய மக்கள் கட்சிநிறுவனர் தேவநாதன்
ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக ஜவடேகர்
பேச்சுவார்த்தை நடத்தினார்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது