தமீமுன் அன்சாரிக்கு ம ம க வில் எந்த உரிமை இல்லை -நீதிதுறை அதிரடி

தமிழ் நாடு முஸ்லிம் முன்னெற்ற கழகத்தில் துணை அமைப்பான  இஸ்லாமிய அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது .அதன் தலைவராக ஜவஹிருல்லாஹ் ,மற்றும் பொது செயலராக தமீமுன் அன்சாரி பொறுப்பு வகித்தனர் மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டனியாமைத்து மூன்று தொகுதிகள் பெற்று இரண்டு தொகுதிகள் வெற்றி பெற்றது . அதனை தொடர்ந்துகடந்த ஆண்டு  ஜவஹிருல்லாஹ் அவர்களுக்கும் தமீமுன் அன்சாரி அவர்களுக்கு கட்சியில் கொள்கை அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் இருந்தது .அதன் பின்னர் ம ம க கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்ததாக பொது செயலாளர் பதவியில் இருந்து தமீம் அன்சாரியை விடுவித்தார் ஜவஹிருல்லாஹ் .

.இதன் காரணமாக தமீமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களை கொண்டு தனி பிரிவாக செயல்பட துவங்கினர் அவ்வபோது இரு தரப்பினருக்கும் கைகலப்புகள் நடக்கும்.பொது செயலாளர் என்ற அடிப்டையில் ம ம க கட்சி எனது தலைமையில் தான் இருக்கிறது என்று தமீமுன் அன்சாரி பொது குழுவை கூட்டி ஜவஹிருல்லாஹ் தரப்பிற்கு எதிராக தீர்மானகளை அமைத்து செயல்பட்டார் தமீமுன் அன்சாரி .அதன் தொடர்ச்சியாக ஜவஹிருல்லாஹ் தமீமுன் அன்சாரியை கட்சியை விட்டு நீக்கினர் .அதன் பின்னர் தமீமுன் அன்சாரி ம ம க கட்சி மீது உரிமம்  கோரிசென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார் .வழக்கு இன்று 25-2-16 தேதி விசாரணைக்கு வந்தது .வழக்கின் தன்மை அறிந்து நீதிபதி வழக்கு தள்ளுபடி செய்தார் .இதனை தொடர்ந்து ஜவஹிருல்லாஹ் அணியினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது