காணாமல் போன நினைவுகள், ஞாபகம் வருமா?

வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொன்னாலும், பள்ளிக்கூட வாழ்க்கை என்பது தனி அலாதிதான். அது யாராக இருந்தாலும் சரி பள்ளி வாழ்க்கை மாதிரி இனிமேல் வாழமுடியுமா என்ற கேள்விகளோடு எத்தனையோ உள்ளங்கள் இன்றும் நினைத்து பார்பதுண்டு. அந்த வகையில் எடுத்தக் கொண்டால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அந்தந்த வயதினருக்கு ஏற்ப பள்ளிக்கூட வாழ்க்கையும் வித்தியாசமாக இருந்துருக்கும்.

அந்த வரிசையில் என்னுடைய பள்ளிவாழ்க்கை ஒரு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு நம் மத்தியில் அநேகம் பேர் இருக்கின்றனர். அப்படி அநேகம் பேர் இருந்தாலும் பள்ளி ஆரம்ப நாட்களில் பள்ளிக்கு போவது என்றால் அது நரக வேதனை என்று அறியாப் பருவத்தில் துவண்டது உண்டு, பள்ளிக்கூடம் போகாமல் ஒழித்தது உண்டு, அந்த இளம் வயது பள்ளிப்பருவம் இருக்குதே அதை கவலையற்ற, நவீனமற்ற, காதல் பிரச்சனையற்ற, ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள் கிசு கிசு அற்ற, ஒரு மூடை புஸ்தகம் இல்லாத ஜாலியான பள்ளி வாழ்க்கை என்றே சொல்லலாம்.

1960களில் தட்டாரத் தெருவில் அமைந்து இருந்த (ஒன்றகாசு) என்று அழைக்கப்படும் அந்த பள்ளியில் முதலாம் வகுப்பில் நான் சேர்க்கப்பட்டேன், பின்பு அந்த பள்ளிக்கூடம் சேவியர் பள்ளி என்ற பெயரில் தச்சத்தெருவில் கம்பிகளால் அடைக்கப்பட்ட கட்டமரைக்காயர் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு ஒரு வருடம் இயங்கியது, பின்பு அதே தெருவில் உள்ள மர்ஹூம் ஷாதுலி வீட்டு வளாகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு வருடங்கள் இயங்கியது, பின்பு செக்கடிமோடு முக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சிப்பி சோப்பு கம்பெனியை நீக்கி விட்டு அந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு ஒருவருடம் இயங்கியது, பின்பு சம்சுல் இசுலாம் சங்க கட்டிடத்தில் இயங்கியது, பிறகு நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு தேறிவிட்டோம், பள்ளியின் நிர்வாகத்தில் குழப்பங்கள் வரவே நாங்கள் எல்லோரும் பிரிந்து போய் ஒன்னானம்பர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தோம்.    

இன்றைய நாட்களில் கல்வியை முக்கியமாக கருத்தப்பட்டாலும் அன்று கல்வி கற்க வில்லை என்றாலும் அனுபவ அறிவைக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் ஏராளம். திறமையை வைத்து காரியத்தை சாதித்து வந்தவர்களும் ஏராளம், ஏன் படிப்பறிவு இல்லாமல் திருமணம் கூட நடந்துள்ளது.

தொல்லாயிரத்துக்கும், ஒன்பதாயிரத்துக்கும் வித்தியாசம் தெரியாத மாப்பிள்ளைகள் வாழ்ந்த காலம் அன்று.

இன்று எவ்வளவுதான் திறமை இருந்தாலும், சாதாரண ஒரு வேலைக்குக் கூட என்ன படித்து இருக்கின்றாய் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர், திருமணமாக இருந்தாலும் அழைப்பிதழ்களில் மணமக்கள் பெயருக்கு பக்கத்தில் படித்த படிப்பை இடுவது கௌறவமாக இருக்கின்றது.

தொடர்ந்து படியுங்கள்.   

"டக்" "டக்" யாரது..?
"
திருடன்"

"என்ன வேனும் ...?
"
நகை வேனும்..!!

"என்ன நகை..?
"
கலர் நகை...!!

"என்ன கலர்...??
"
பச்சை கலர்...!!!

"என்ன பச்சை..??
"
மா" பச்சை...

"என்னம்மா..?
"
டீச்சரம்மா..!

"என்ன டீச்சர்...?
"
கணக்கு டீச்சர்..!

"என்ன கணக்கு..?
"
வீட்டு கணக்கு..!!

"என்ன வீடு...??
"
மாடி வீடு..!!!

"என்ன மாடி ...?
"
மொட்ட மாடி...!

"என்ன மொட்ட..??
"
பழனி மொட்ட...!

"என்ன பழனி..??
"
வடபழனி...!!

"என்ன வட..?
"
ஆமை வட..!!

"என்ன ஆமை..?
"
கொளத்தாம ..!!

"என்ன குளம்...!!
"
த்திரி குளம்..!!

"என்ன திரி..??
"
விளக்கு திரி..!!

"என்ன விளக்கு ..??
"
குத்து விளக்கு ...!

"என்ன குத்து..??
"
கும்மாகுத்து..!!!/
.
சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...

உம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல் அழுத தருணம்

நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்

வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்.

ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு வேட்டி, இரண்டு சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்

என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்

வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக விளையாட்டு  விளையாடின தருணம்

நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல்
மை தெளித்து உதவிய தருணம்

வெள்ளி விடுமுறை என்றாலும் மழைக்காக 5 பிரீஎட் விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்த தருணம்.

எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்த தருணம்.🚸🚸🚸

விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால் வருத்தப்பட்ட தருணம்.

அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்ட தருணம்.

சில நேரங்களில், நண்பர்களின் மதிய உணவை நைசாக
அபேஸ் பண்ணின தருணம்.

காலை ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்ட தருணம்.
மாலை நான்கு மணி ஆனால் சந்தோஷபட்ட தருணம்.

அம்மே, காலரா போன்ற நோய்களுக்கு ஊசி குத்த வர்றார்கள்
என்ற உடன் பயந்து கொண்டு பள்ளி ஜன்னல் பக்கம் தப்பிக் குதித்து
ஓடின தருணம்.

பள்ளி ஆண்டு விழாவில் சந்தோஷத்தில்
துள்ளிக் குதித்த தருணம்.

முழுப் பரீச்சை லீவில் பிரிய முடியாமல்
பிரிந்து சென்ற தருணம்.

இப்போ அந்த நாளுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும்
நண்பர்கள் எத்தனை பேர்?

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

2 comments:

 1. ஜமால் காக்கா அவர்கள் அழகிய முறையில் தொகுத்து எசுதி இருக்கிறீர்கள்..! பள்ளிப் பருவம் மீண்டும் அதே நண்பர்களுடன் வராதா என ஏங்கிக் கொண்டிருப்பதில் நானும் ஒருவன்..

  வகுப்புத் தேர்வு நடக்கும் பொழுது அதற்கு பயந்து பள்ளி மைதான சுவர் ஏறி கீழே குத்தித்த பொது அருகில் இருந்த சாக்கடையில் தொப்பென்று விழுந்தாலும் வெளியே வந்துவிட்டோம் என்று மகிழ்ந்த தருணம்.

  வீட்டில் பள்ளிகூடம் செல்வதாக சொல்லி பள்ளிகூடத்தை கட் செய்துவிட்டு நண்பர்களுடன் பள்ளிவாசல்களில் அமைதியாய் அனைவரும் ஒன்றாக தூங்கிய தருணம்.

  வியாழக்கிழமை மதியந்தோறும் நண்பர்களுடன் கூட்டாக பள்ளிக்கூடத்தை கட் செய்துவிட்டு படம் பார்த்த தரும்... இவை எல்லாத்தையும் இப்பொழுது ஞியாபகம் செய்து பார்க்க மட்டுமே முடியும்.

  ReplyDelete
 2. பள்ளிக்கூடம் கட் அடித்தவர்களுடன் நாமளும் சேர்ந்து ஒரு நாள் கட் அடித்துவிட்டால் பெரிய தாதாவாக பீத்திக்கொண்ட கொண்ட தருணம். கட் அடித்தவுடன் கந்தூரி நடக்கும் மைதானம் காட்டு பள்ளிவாசலின் அருகாமையில் சென்று மண்ணை தோன்றி புத்தகத்தை மறைத்து வைத்துபுட்டு எப்போடா பள்ளிக்கூடம் விடுற நேரம் வரும் விட்டுக்கு போய் உம்மா போட்டு வைத்த தேத்தண்ணியை குடிச்சு புட்டு சில்லு பந்து.கிட்டி பில்லு விளையாடலாம் என்று எண்ணிய தருணம் அது.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது