அதிரையர்களில் ஆண்களும் இனி, பெண்களைப் போல் முகமூடி அணிந்து செல்வது நல்லது.

 

மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என எச்சரிக்கை


அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வகத்தில் எலிகள் மூலம் ஆராய்ச்சி மேற் கொண்டனர். சீன தலைநகர் பெய்ஷிங்கில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.

இதனால் அங்கு காற்றில் புகை கலந்த அதிக அளவு மாசு ஏற்பட்டுள்ளது. எனவே பெய்ஜிங்கில் மாசுபட்ட காற்றை சுவாசித்த கர்ப்பிணி எலிகளை பிடித்து வந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அவற்றில் மாசு பட்ட காற்றை சுவாசித்த எலிகளின் நுரையீரல் மற்றும் கல்லீரல் திசுக்களில் வீக்கமும், அலர்ஜியும் ஏற்பட்டது. உடலில் கொழுப்பு சத்தும் அதிகரித்து எடை அதிகரித்து இருந்தது.

இன்சுலின் பிரச்சினையால் 2–ம் வகை நீரிழிவு நோயும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் மாசு படாத காற்று பகுதியில் வாழ்ந்த எலிகளிடம் நடத்திய சோதனையில் இது போன்ற குறைபாடுகள் இல்லை. எனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிரையில் சுற்று சூழல் சுகாதாரம் கடுமையாக மோசமாக உள்ளது, இதற்க்கு பொதுமக்களும் பலவகையில் காரணமாக இருக்கின்றனர், அதனால் எங்கு பார்த்தாலும் மாசுபட்ட காற்றுதான் உள்ளது, எனவே, அதிரையர்களில் ஆண்களும் இனி, பெண்களைப் போல் முகமூடி அணிந்து செல்வது நல்லது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது