இவர்கள் அதிரை மக்களுக்கு என்ன செய்தார்கள்???

அதிரையில் 90 சதவிதம் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் ஊர் என்று பரவலாக நமதூருக்கு அடையலாம் உண்டு .மார்க்க பற்றுடன் சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் மறைந்தும் போனார்கள் .சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நமதூர் வாசிகள் அதிகளவில் அரசியல் ஆர்வம் இல்லாமலும் ஒரு சிலர் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தனர் .மேலும் அரசியல் காழ்புணர்வு பழிவாங்கும் குணம் சமூக பணிக்கு இடையுறாக இருப்பது போன்ற நிகழ்வுகளை பார்பதற்கே அரிதாக இருந்த நமதூர் தற்போது அரசியல் காழ்புணர்வு போன்ற பல்வேறு செயல்களால் பின்னப்பட்ட வலையாக இருக்கிறது .ஆம் சமீப  காலமாக அதிரை பேரூர் நிர்வாகத்திற்கு அதிரையில் இருக்கும் சமூக அமைப்பிற்கும்  நடந்து வரும் யுத்தம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்திகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது .

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பேருராட்சி  நிர்வாக மன்ற தலைவராக அஸ்லம் பொறுப்பேற்ற பிறகு பேருராட்சி நிர்வாகம் மக்கள் பார்வைக்கு வந்ததே உண்மை .மக்களிடம் நேர்பட பேசி பேருராட்சி பணிகள் குறித்து மக்களுக்கு வெளிபடையாக சொன்னவர் அஸ்லம் .மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு எற்படுத்தி குப்பைகள் இல்லா அதிரையை மாற்ற முயற்சித்த அஸ்லம் அவர்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்ப்பு மேலும் உற்சாகத்தை  ஏற்படுத்தி பல நற்பணிகள் செய்ய தூண்டியது. .அதிரையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிரை பகுதியில் நீர்மட்டம் குறைந்து  மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவித்த போது   சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர் துருவமாக இருந்து வரும் துணை சேர்மன் பிச்சையுடன் இணைந்து  அதிரையில் இருக்கும் குளத்திற்கு இரவு பகல் பாராமல் தண்ணீர் நிரப்பிய பணியை மறந்து விடுவார்களா நமதூர்  மக்கள் ?அதைபோல் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கிடங்காக காட்சி தந்த செட்டியன் குளத்தை தூர்வாரி குளத்தில் தண்ணீர் நிரப்பியது அஸ்லம் நிர்வாகம் தான் என்பதை மக்கள் நன்கு அறிவர் .பேருராட்சி மன்ற தலைவராக வந்தவுடன் சுகாதார பணிகளில் அதிக ஆர்வம் காட்டினர் .  பிளாஸ்டிக் பை ஒழிப்பு போன்ற பணிகளில் ஈடுப்பட்டு பிறகு கடை உரிமையாளர்களின் ஆதரவு இல்லாத நிலையில்  அஸ்லம் அவர்களுக்கு முயற்சி எடுத்தமைக்கு பாராட்டாதா  மக்கள் இல்லை .மக்களின் தேவை பூர்த்தி செய்வதற்காக அஸ்லம் மற்றும் பிச்சை ஆகியோர் இணைந்து செயல்ப்பட்டது அதிரை அரசியல் வரலற்றில் ஒரு புதுமை .முதியோர்களுக்கு புத்துணர்வு முகாம் ,மருத்துவ வசதி தொடர்பான முயற்சிகள் போன்ற பணிகள் சாதனை படிக்கட்டுகள் .இன்னும் சொல்லபோனால் அதிரை சுகாதார முன்னெற்ற கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்திய அஸ்லம் அவர்கள் பல சமூக ஆர்வளர்களை கொண்டு அதிரையில் சுமார் 1000 மேற்ப்பட்ட மரங்களை சாலையில் நடும் பணிகளில் ஈடுபடுவது எத்துணை நபர்கள் அறிவார்கள் .

சமிபத்தில் இஸ்லாமிய கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து எங்கள் கட்சியை சேர்ந்த பேருராட்சி உறுப்பினர்களின் வார்டுகளில் முறையாக பணிகள் நடைபெற வில்லை என கூறி இரண்டு முறை பேருராட்சி நிர்வாகத்தை முற்றுகை செய்திர்கள் .இஸ்லாமிய அமைப்பான நீங்கள் இஸ்லாமியர் நிர்வாக பொறுப்பில் இருக்கும் நமதூரில் அரசியல் காழ்புணர்வு தொடர்ந்து இருந்தால் பிறமத சகோதர்கள் நம்மை எப்படி எண்ணுவார்கள் .பேரூர் தலைவர் 19 வார்டுக்கு ஒன்று செய்யவில்லை என்று நீங்கள் சொல்கிறிர்கள் புதுமனை தெரு வில் இருக்கும் குளத்திற்கு சமூக ஆர்வலர்களை கொண்டு தண்ணீர் நிரப்பிய பொழுது எங்கு சென்றிர்கள் .17 வார்டு பகுதியில் அதிகளவில் பணிகள் நடைபெற்று வந்ததை மக்களும் அறிவர் .ஊர் நலனுக்காக இணைந்து பணிகள் செய்த அஸ்லம் மற்றும் பிச்சை அவர்களை ஊழல் கூட்டணி என்று சொல்கிறிர்கள் அவர்கள் எதைத்தான் ஊழல் செய்தார்கள் .மக்கள் வெயில் மழையில் நிற்கும் நிலையை போக்க பேருந்து ஆக்கரிப்புகளை அகற்றியது ஊழலா? ,பேருந்து நிலையை கடைகளை மக்கள் பார்வையில் பொது ஏலம் விடுவது தொடர்பாக முடிவடுத்தது ஊழலா? .

மேலும் மக்களின் நலனை கருதி கடைதெரு சாலையில் இருக்கும் ஆக்கரமிப்புகளை  அகற்றியது ஊழலா?  கடலில் கலக்கும் தண்ணீரை அதிரைக்கு வரவைக்க முயற்சி செய்தது ஊழலா?உங்கள் பார்வைக்கு .முறையாக பேரூர் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அஸ்லம் அவர்களிடம் எடுத்துரைத்தால் அவர் செய்யாமல் இருக்கமாட்டார்.பல வருடங்களாக தொடர்ந்து வரும் உங்களுடைய விருப்பு வெறுப்புகளை களைந்து இஸ்லாமியர்கள் என்ற நினைப்பை கொண்டு இரு பிரிவினர்களும் ஒன்று இணைந்து மக்களுக்கு நற்பணிகள் செய்ய வேண்டுகிறேன்.

அரசியல் மாறலாம் ஆட்சிகள் மாறலாம் ,சொந்தம்  மாறாது, நட்பு மாறாது. 

அஸ்ஸலாமு அழைக்கும் 
முஹம்மது யாகூப் 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

4 comments:

 1. நல்ல ஆக்கம்

  ஆக 4 வருசமாக முறைத்துக்கொண்டது தான் மிச்சம், சாதித்தது ஏதும் தெரியவில்லை. எதிரும் புதிருமான துணையே இணையாக இருந்த போது நட்பாகிய நீங்கள் பகைத்தே வருவது ஏனோ.

  எதிர்ப்பில் அவர் வளர்ந்திருக்கிறார். ஆனால் வார்டு அளவில் நீங்கள் பின் தங்கி இருப்பதாக சொல்கிறீர்கள். ஆக நஷ்டம்.....?

  ReplyDelete
 2. Insha Allah coming election "IVARHAL VAYILE MANNU"

  ReplyDelete
 3. ம.ம.க வினர் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள்.
  அஇஅதிமுக விடம் கூட்டு சேர்ந்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று.......
  திமுக விடம் பேரம்பேசி கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினர்ராக தேர்ந்துஎடுத்து.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டனி வைக்கலாம் என்று எண்ணி கொண்டு இருக்கிறிர்கள்.
  ம.ம.க= ப.ம.க

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது