புதிய பாதை...புதிய பயணம்,,,,,மனிதநேய ஜனநாயக கட்சி

மனிதநேய மக்கள் கட்சியின் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு எங்கள் தரப்பில் தொடக்கப்பட்டது.
அந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இன்று (28.02.2016) கும்பகோணத்தில் எங்கள் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் 'புதிய பாதை- புதிய பயணம்' என்ற முழக்கத்தோடு‪#‎மனிதநேய_ஜனநாயக_கட்சி‬ என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. 
இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் நானும், கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். புதிய தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்
வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும் எங்களுக்கு அனைவரும் அதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கி்றோம்.
இறையருளால் எமது புதிய பயணம் புதிய பாதையில் தொடங்குகின்றது
இவண்
M.தமிமுன் அன்சாரி 
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28_02_2016
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
புதிய பாதை
புதிய பயணம்Share:

3 comments:

 1. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சி????

  ReplyDelete
 2. புதிய பாதை புதிய பயணம் மறுமையை நோக்கிய கொள்கை பயணமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள் சொல்வதற்க்கு பதிலாக வருத்தப் படுகிறோம் சமுதாயத்தில் பிரிவுகளை கண்டு இன்னும் எத்தனை இயக்கங்கள் கட்சி????

  ReplyDelete
 3. My humble request on behalf of every Muslims in tamilnadu.
  Pls do not split the muslim votes by starting variety of parties.
  Even I can say all the Islamic parties should come under one national level party.(Muslim League or SDPI or any national level Islamic parties).
  Be united. Do not split into different parties and Do not split Islamic valuable votes.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது