அதிரை அருகே ECR சாலையில் ஆட்டோ மீது மினிலாரி மோதல்...!!!

அதிராம்பட்டிணம்  அருகே உள்ள கரிசைகாடு பகுதியில்  திருத்துறைப்பூண்டியில்  இருந்து ECR சாலையில்  தொண்டி நோக்கி  சென்றுகொண்டிருந்த  மினிலாரி ,  அதே வழியில் முத்துப்பேட்டையில் இருந்து  அதிராம்பட்டினம் வந்த  ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில்  இருந்தவர்களுக்கு சிறிது  காயம்  ஏற்பட்டது.  அவர்களை  அருகில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். இதில்  ஓட்டுநர்களுக்கு காயம் ஏதும் இல்லை.   அதிராம்பட்டினம் காவல் துறையினர்  விபத்து நடந்த இடத்திற்கு  விரைந்து சென்று விபத்தில் சிக்கிய  வாகனங்களை மீட்டனர்  மேலு‌ம்  இதுகுறித்து  விசாரணை நடத்தினார்கள்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது