கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டு விழா !

67 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளர் ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருது வழங்கி கெளரவித்தார்.

இதையொட்டி சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் அவர்கள் கோட்டை அமீர் விருது பெற்ற அபூபக்கர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், கோட்டை அமீர் விருது பெற்ற அபூபக்கர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் அதிரை நகர தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தனது வாழ்த்துரையில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டுதலையும், வாழ்த்தையும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் தெரிவித்துக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் அவர்கள் கோட்டை அமீர் என்றால் யார் ? என்ற தலைப்பில் சிறிதுநேரம் உரை நிகழ்த்தினார்.

முன்னதாக சம்சுல் இஸ்லாம் சங்க துணை செயலாளர் நூர் முஹம்மது வரவேற்புரை ஆற்றி விழா முடிவில் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

 
courtesy:adirainews 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது