எஸ்.டி.பி.ஐ மௌலவி தெஹலன் பாக்கவி அவர்களின் மெய்சிலிர்க்கும் அறிவிப்பு!

நேற்று மக்காவில் ISF சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பக்கவி அவர்கள் பங்கேற்றார்கள் நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கான கேள்விகளும் ஒதுக்கப்பட்டன....
ம.ம.க வை சார்ந்த முகைதீன் என்பவரின் கேள்வி : தற்போது தமிழகத்தில் அரசியல் பரபரப்பாக பேசப்படுகிறது.இதில் முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்சிகள் ம.ம.க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் ஏன் ஒரே அணியில் நின்று தேர்தல் களத்தை சந்திக்க கூடாது.? அல்லது மூன்று பேரும் தமிழகத்தில் இருக்க கூடிய பெரிய கட்சிகளிடம் ஏன் கூட்டனி வைக்க கூடாது? இதில் உங்கள் நிலைப்பாடு என்ன ? ஒற்றுமையாக உங்கள் பங்கு என்ன ?
மௌலவி தெஹ்லான் பாக்கவி அவர்களின் பதில் : இந்த கேள்வி ஒரு நடுநிலையாளரிடமிருந்தும்,பொதுமக்களிடமிருந்தும் இருந்து வந்தால் அழகாக இருந்திருக்கும் ? ஆனால் நீங்கள் ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கின்றீர்கள் இந்த கேள்வியை நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சி தலைமையிடம் கேட்டதுண்டா....? சில மாதங்களுக்கு முன்பாக திருச்சி ஜமால் முஹம்மத் காலேஜில் சமூகத்தை சார்ந்த சில முக்கிய பிரமுகர்களால் சமூக ஒற்றுமைக்காகவும் அரசியலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்பதிற்காக அந்த முக்கிய பிரமுர்கள் எங்களுக்கு அழைப்பு கொடுத்தனர் அதில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன்,ம.ம.க வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் ஆகிய நானும் இருந்தோம். அந்த முக்கிய பிரமுர்கள் எங்களிடம் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன் நிறுத்தி எங்களிடம் பேசு வார்த்தை நடத்தினார்கள். நான் அங்கு கூறியது நிச்சயமாக வர வேரவேற்கின்றோம் அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயமாக எஸ்.டி.பி.ஐ ஒற்றுமைக்கான படியில் முதல் ஆளாக இருக்கும் என வாக்குறுதியும் அளித்தேன்.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 15 நாட்களுக்கு பிறகு அதில் ஒரு கட்சி நாங்கள் தி.மு.க வின் பக்கம் கூட்டனியாகவும் இன்னொரு கட்சி அ.தி.மு.க வு க்கு ஆதரவாகவும் கூறிவிட்டனர்.ஆனால் அதில் எஸ்.டி.பி.ஐ யாருடன் கூட்டனி என கூறவில்லை.அந்த கூட்டத்தில் மட்டுமல்ல எஸ்.டி.பி.ஐ நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் நான் ஒற்றுமையை பற்றி கூறியிருக்கிறேன்.ஒற்றுமையின் முதல் படியாக SDPI இருக்கும் என வாக்குறுதியும் அளித்து வருக்கின்றோம்.இங்கும் கூறுகின்றேன் அப்படி ஒன்று ஏற்படுமானால் எஸ்.டி.பி.ஐ நிச்சயமாக முதல் படியாக இருக்கும்" என்று கூறினார்.
Share:

7 comments:

 1. //நேற்று மக்காவில் ISF சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பக்கவி அவர்கள் பங்கேற்றார்கள் நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கான கேள்விகளும் ஒதுக்கப்பட்டன....//

  யாங்கப்பா வணக்க வழிபாடு செய்யும் இடத்திலும் கூட உங்கள் பிரிவினை அரசியலா ???
  கொஞ்சம் திருந்துகப்பா ???? உங்கவர்களுக்கு என்று ஒரு கூட்டம் போகிற இடங்களில் எல்லாம் மீட்டிங் மக்கா போன நன்மையையும் இதிலே கிடைக்காமல் போய்விடும். யாஅல்லாஹ் இவர்களை கருத்து ஒற்றுமை உடைய மக்களாக ஆக்கி வைப்பாயாக ஆமீன் ...

  ReplyDelete
 2. SDPI யின் நல்ல நிய்யத்து போல முஸ்லிம் லீக்குக்கும், மனித நேய கட்சியினர்களுக்கும் வர நாயன் நாடுவானாக!

  ReplyDelete
 3. Ya Allah combine all Muslim political parties in this election.

  ReplyDelete
 4. I am not in any party like TNTJ, INTJ, TMMK,SDPI buvas a common muslim, i can suggest MMK, ML should join with SDPI in all the election all over tamilnadu for the welfare of Muslims.

  ReplyDelete
 5. I am not in any party like TNTJ, INTJ, TMMK,SDPI or any other party, but as a common muslim, i can suggest MMK, ML should join with SDPI in all the election all over tamilnadu for the welfare of Muslims. MMK and ML should think about Muslim development before join with DMK or ADMK.

  ReplyDelete
 6. I am not in any party like TNTJ, INTJ, TMMK,SDPI or any other party, but as a common muslim, i can suggest MMK, ML should join with SDPI in all the election all over tamilnadu for the welfare of Muslims. MMK and ML should think about Muslim development before join with DMK or ADMK.

  ReplyDelete
 7. இந்த கூட்டம் மக்காவில் நடக்கவில்லை மாறாக ஜித்தாவில் தான் கடந்த வெள்ளிகிழமை நடந்தது. இது போன்ற செய்திகளை சரிபார்த்து/உறுதிப்படுத்தி பதிவது நல்லது.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது