TIYA வின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு



துபாய்: வெள்ளிக்கிழமை நேற்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு TIYA வின் தலைவர் N. முகமது மாலிக் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் கூட்டம் தொடங்கப்பட்டது. முன்னதாக நிஜார் அஹமது கிராத் ஓதினார் அதனை தொடர்ந்து 2014 முதல் 2015 வரையிலான TIYA வின் செயல்பாடு,கணக்கு விபரங்கள் அனைத்தும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.


மூத்த உறுப்பினர்களான சகோ.M.பகுருதீன் அவர்களையும் சகோ. S.K. முகமது சுல்தான் அவர்களையும் தேர்வு குழு உறுப்பினராக தேர்வு செய்து, TIYA வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.அதன்படி அவர்கள் இருவரும் கீழ்க்காணும் சகோதரர்களை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒருமனதாக தேர்வு செய்தார்கள் அதன் விபரம் வருமாறு.


நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :

1. தலைவர்                   M. ஹாஜா முகைதீன் (SP )
2. உதவித் தலைவர்           Dசகாபுதீன்
3. செயலாளர்                 F. சேக் நஸ்ருதீன் (SM )
4. துணைச் செயலாளர்        B. முகைதீன் அப்துல் காதர்
5. பொருளாளர்               S. நவாஸ்

செயற்குழு உறுப்பினர்கள் :
1. K.M..N. முகமது மாலிக்
2. S.M. அப்துல் காதர்
3. S.K. முகமது சுல்தான்
4. N.M..S. சேக் பரீது
5.  K.M.S. நஜ்முதீன்
6. M. சமீர்
7. M. அப்துல் மஜிது
8. S. ஹாஜி முகமது
மேற்கண்ட நிகழ்வுடன் TIYA வின் பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒரு மனதாக இனிதே நிறைவு பெற்றது.
என்றும் அன்புடன்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்

TIYA














---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது