Thursday, March 31, 2016

காதிர் முகைதீன் கல்லூரியின் 61ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

இன்று காதிர் முகைதீன் கல்லூரியில் 61ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது, இதில் சென்ற ஆண்டு படித்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். மேலும் இதில் பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.



நடுத்தெரு ஊ. ஒ. தொடக்கப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா




நடுத்தெருவில் அமைந்திருக்கும் ஊ. ஒ. தொடக்கப் பள்ளியின் 77 வது ஆண்டு விழாவின் துவக்கத்தில் வாழ்த்துரை வழங்கிய காதிர் முஹைதீன் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜனாப் .எஸ் . கே. எம். ஹாஜா முஹைதீன் அவர்கள், 77 வது ஆண்டு விழாவை காணும் ஊ. ஒ. தொடக்கப் பள்ளியின் வாழ்த்துரையில் கலந்து கொள்ளும்  தனக்கு 76 வயது தான், அதாவது இப்பள்ளியை  விட ஒரு வயது குறைவானவன் என்று குறிப்பிட்டு பள்ளியின் பழம் பெருமையை சுட்டிக்காட்டினார். அத்துடன் வருங்காலத்தில் உயர் நிலைப் பள்ளியாக திகழ வேண்டும் என்றும் தனது வாழ்த்தை வெளிப்படுத்தினார்.  பெரும்பாலான மக்கள் திரளாக கலந்து கொண்டு ஆண்டு விழாவினை சிறப்பித்து கொண்டிருக்கின்றனர்.

தகவல் : வாவன்னா - எஸ். முஹம்மது இப்ராஹிம், அதிரை. 

அதிரை திமுக கழக வாட்ஸ் ஆப் அறிமுகம்

அதிரை திமுக கழகம் சார்பில் நடைபெறும் முக்கியநிகழ்வுகள்,நிகழ்ச்சிகள் மற்றும் தலைமை நிகழ்வுகள் உட்பட திமுக சம்மந்தப்பட்ட அணைத்து பதிவுகளும் வாட்ஸ் ஆப்பில் பதியப்படும் என்பதினை திமுக அபிமானிகளுக்கு தெருவித்து கொள்கிறோம்.

இந்த இணைப்பில் உடனே இணைய 7418547850 தொடர்பு கொள்ளவும.


எத்தனை குளிர் சாதனப் பெட்டி வந்தாலும் இத மிஞ்ச முடியுமா?

கோடை வெயிலிருந்து பொதுமக்களை காக்க அதிரையில் சிலர் தங்களால் இயன்ற அளவு தண்ணீர் பானை போன்றவைகளை வைக்கின்றனர்.
இன்னும் சிலர் தங்கள் வீடுகளுக்கு  கோடையை குளிர்ச்சியாக்க பானைகளை வாங்கி செல்கின்றனர். நமதூரில் தற்போது ரூ.30 முதல் ரூ.80 வரையிலான விலையில் இப்பானைகள் கிடைக்கின்றது. என்ன தான் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தாலும் இயற்கையின் மூலம் கிடைக்கும் குளிர்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும்  ஈடாக முடியுமா என்ன?

பயத்தம் பருப்பு சுதில் ஹவாய்



தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1 கப்

அரிசி மாவு - 1/2 கப்

ரவா - 1/2 கப்

வெல்லத்தூள் - 2 கப்

நெய் - 1/2 கப்

தேங்காய்த்துருவல் - 1 கப்

முந்திரிப்பருப்பு - 10 முதல் 15 வரை

ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன் 


செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் பயத்தம் பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்தப் பருப்பை குக்கரில் போட்டு 2 கப் தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத் தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பிலேற்றி அதில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் நெய் விடவும். அதில் ரவாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்ன்ர் அதில் அரிசிமாவைப்போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும்.

பின் தேங்காய்த்துருவலைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வறுக்கவும். அதில் வெந்தப் பருப்பை நன்றாக மசித்து சேர்க்கவும். அத்துடன் வெல்லப்பாகையும் சேர்த்து கிளறி விடவும். மிதமானத் தீயில் பயத்தம் பருப்பு சுதில் ஹவாய் கெட்டியாகும் வரை வைத்திருந்து கிளறிக் கொண்டே இருக்கவும். பின் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.

இப்போது அந்த சுதில் ஹவாய் ரெடி. சாப்பிட்டு விட்டு சூடான நீரை அருந்த வேண்டும்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


பாதியில் நிறுத்தப்பட்ட பாலப்பணி மீண்டும் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு



சின்னங்குடி-தரங்கம்பாடி இடையே பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டுமானபணி மீண்டும் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

பாலம் கட்டும் பணி நிறுத்தம்
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சின்னங்குடி மீனவ கிராமத்தில் மஞ்சலாற்றின் குறுக்கே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி நிதி மூலம் ரூ.3 கோடி செலவில் சின்னங்குடி, தரங்கம்பாடி பகுதி மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்த நிலையில் பாலம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி, நடராஜன், செல்வமணி, சக்கரவர்த்தி ஆகியோர் கூறியதாவது:-

சின்னங்குடி, தரங்கம்பாடி ஆகிய மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு சுனாமி நிதி மூலம் சுமார் ரூ.3 கோடி செலவில் மஞ்சலாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்றது. அதன்பின்னர் பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் சின்னங்குடி பகுதியை சேர்ந்த மக்கள், தற்போது அரசு அலுவலகங்கள் மற்றும் இதர பணிகள் தொடர்பாக பொறையாறு மற்றும் தரங்கம்பாடிக்கு செல்ல ஆக்கூர் முக்கூட்டு வழியாக சுமார் 17 கி.மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக கால விரயமும், பயண செலவும் ஏற்படுகிறது. இதேபோல பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்க கடந்த சில மாதங்களுக்குமுன்பு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த பணியும் தொடங்கப்படாமல் உள்ளது. 

எதிர்பார்ப்பு
இந்த பாலம் கட்டும் பணி முழுமை பெற்றால் சின்னங்குடி, சின்னமேடு, மருதம்பள்ளம், சங்கேந்தி, காலமநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள், வேப்பஞ்சேரி, மாணிக்கப்பங்கு, தரங்கம்பாடி வழியாக சென்று 6 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பொறையாறு போலீஸ் நிலையம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம், கருவூலம், சார் பதிவாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும்.

மேலும், பாலம் கட்டப்பட்டால் பாலத்தின் வழியாக அரசு மற்றும் மினி பஸ் போக்குவரத்து வசதி ஏற்படும். எனவே, தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி காலதாமதம் இன்றி விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும். மேலும், இணைப்பு சாலை அமைக்கும் பணியையும் கேற்கொண்டு மேற்கண்ட பகுதி மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


பொள்ளாச்சியில் நிலத்தகராறில் இரட்டைக் கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை



கோவை: பொள்ளாச்சியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ராஜீவ் காந்தி என்பருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்பளித்துள்ளது.

பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் சுங்கம் பகுதி தோட்டத்து வீட்டில் வசிப்பவர் முருகன், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள், 55, இவர்களது மகள்கள் மகுடீஸ்வரி, 35, ஜோதிமணி, 30.

இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜீவ் காந்தி, கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் முருகன் குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.

ராஜீவ்காந்தியின் இடத்தில், சுமார் இரண்டடி நிலத்தை முருகன் குடும்பத்தினர் ஆக்கிரமித்து விட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ராஜீவ்காந்தி அடிக்கடி முருகன் மற்றும் அவரது மனைவி, மகள்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு முருகனுக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையே மீண்டும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்க நினைத்த ராஜீவ்காந்தி, முருகனின் வீட்டிற்குள் புகுந்து பழனியம்மாள், ஜோதிமணியை அரிவாளால் சராமாரியாக வெட்டினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மகுடீஸ்வரியையும் ராஜீவ்காந்தி வெட்டினார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பழனியம்மாள், ஜோதிமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகுடீஸ்வரி படுகாயமடைந்தார். இது தொடர்பாக ராஜீவ்காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் கோவை 4வது கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது. குற்றவாளி ராஜீவ்காந்திக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com



கேரளா கல்யாணம்!

















































எல்லோரும் சைகை மொழி பேசும் அதிசயக் கிராமம்!
















பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது.

பாலி (Bali) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில்,ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும்.

இங்கு பெரும்பான்மையாகஇந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.

இங்குள்ள மக்கள் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள்.

உலகிலேயே காது கேட்காத, பேச முடியாத மக்கள் அதிகமாக இருக்கும் இடம் பெங்கலா கிராமம்தான். எனவே, அவர்களிடம் இயல்பாகப் பேசுவதற்காக உருவானதே சைகை மொழி. தாய்மொழியைப் போலவே ஒவ்வொருவரும் இந்த சைகை மொழியையும் குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள்.

இவர்களின் சைகை மொழி தனித்துவம் வாய்ந்தது. கடந்த 7 தலைமுறைகளாக இங்கே காது கேட்கும் பெற்றோருக்கு, காது கேட்காத குழந்தைகளும், காது கேட்காத பெற்றோருக்குக் காது கேட்கும் குழந்தைகளும் பிறக்கின்றன.

இதனால் சைகை மொழி தவிர்க்க முடியாததாகி விட்டது. குறைபாடு உடையவர்களை மட்டமாகப் பார்ப்பதோ, பரிதாபமாகப் பார்ப்பதோ இவர்களிடம் இல்லை.

எல்லோரையும் ஒரே மாதிரி மதிக்கும் பழக்கம் இங்கே நிலவுவதால், யாருக்கும் தங்கள் குறையை நினைத்து வருத்தமே இல்லை.

தேவா கோலோக் என்ற கடவுளின் பரிசுதான் காது கேளாமை என்று நாங்கள் நம்புகிறோம். வாய் பேச முடியாமல் போவதற்குக் காரணம், வெகு காலத்துக்கு முன்பு ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டார்கள். அதிலிருந்து இந்த கிராமத்தில் 2 குறைபாடுகளும் சர்வ சாதாரணமாகிவிட்டன, என்றார் கிராமத்துத் தலைவர் மர்டானா.

பள்ளியிலும் மொழி பாடங்களோடு சைகை மொழியும் ஒரு பாடமாக இருப்பதால் பக்கத்து கிராமத்து குழந்தைகளும் இந்த மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்.

பெங்கலா கிராமம் இப்பொழுது உலகப் புகழ் பெற்றுவிட்டது. சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள், காது கேட்காதவர்கள் என்று பலரும் இங்கே வந்து செல்கிறார்கள். அவர்களுக்காகக் காது கேட்காதவர்கள் நடன நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுகிறார்கள்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com



இந்த கட்டுரையை படித்தவுடன் இது வரை நாம் யோசிக்காத ஒரு உலகத்தை நமக்கு புரிய வைத்து, நம்மை யோசிக்க வைக்கிறது. கொஞ்சம் சிரமம் பார்க்காம இதை படியுங்க....


இந்த கட்டுரையை படித்தவுடன் இது வரை நாம் யோசிக்காத ஒரு உலகத்தை நமக்கு புரிய வைத்து, நம்மை யோசிக்க வைக்கிறது. கொஞ்சம் சிரமம் பார்க்காம இதை படியுங்க....

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
இனிக்கும் செய்தியல்ல!

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்திஎன்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பையில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தைஉருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காகமனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com