50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடம்உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் என்று 50 பேர் கொண்ட பெயர் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான ஃபார்ட்சூன் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.உலகின் சிறந்த 50 தலைவர்கள்”  என்ற தலைப்பில்  ஃபார்ட்சூன் இதழின் மூன்றாம் ஆண்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாய தொண்டு ஆற்றியவர்கள் என உலக மக்களால் கவரப்பட்ட ஆண் பெண் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த பட்டியலில் இந்தியா சார்பில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்  இடம் பிடித்துள்ளார். இவர் 42 வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா சார்பில் தேர்வான ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்பது கவனிக்கத்தக்கது. டெல்லியில்  நிலவும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கெஜ்ரிவால் டெல்லியில் அறிமுகப்படுத்திய வாகன கட்டுப்பாட்டு திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளது.இந்த பட்டியலில் முதலிடத்தை அமேசான் நிறுவன சீ இ ஓ ஜெப் பேஸாஸ் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல்லும், மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி 3 வது இடத்திலும், போப் பிரான்சிஸ் 4 வது இடத்திலும், ஆப்பிள் நிறுவன சீ இ ஓ டிம் குக் 5 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி ஆகியோருக்கு இடம் இல்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. முன்னதாக நேற்று, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான டைம்வாரப்பத்திரிகை, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக் கான பட்டியலை டைம்பத்திரிகை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. இதற்காக 127 பேர் அடங்கிய உத்தேச பட்டியலை அறிவித்து உள்ளது. இதில், இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது