தமிழக சட்டமன்றத் தேர்தலில் (AIMIM) ஆல் இந்தியா மஜ்லிஸ் கட்சி போட்டி?


தமிழகத்தில் எதிர் வரும் மே மாதம் 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் இப்பொழுதே களைகட்டத் துவங்கிவிட்டது.

தமிழக அரசியல் கட்சிகளிடையே தேர்தல் அறிக்கை, கூட்டணி தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் போன்றவைகள் முழுவீச்சில் தேர்தலுக்கு தயார் செய்யப்பட்டு வரும் இவ் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைசி அவர்களின் (AIMIM) ஆல் இந்தியா மஜ்லிஸ் இ இத்திஹதுள் முஸ்லிமீன் கட்சியும் தமிழக அரசியலில் களம் காண முன்வந்துள்ளது. இதனை சிறுபான்மையினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று உள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் இதற்காக அக் அக்கட்சியின் தலைவர் அசதுத்தீன் உவைசி பிரச்சாரத்திற்காக 7 நாட்கள் தமிழகம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கத் துவங்கியுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானவில் நடைபெற்ற தேர்தல்களிலும் இக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் (AIMIM) கட்சி கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share:

2 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மற்றசமுதாய அமைப்புகள் எல்லாரும் மர்ஹூம் அப்துல் சமது மர்ஹூம் அப்துல் லத்திப் இவர்கள் இரு பிரிவுகளாக இருந்து சமுதாயத்தை துண்டாகித்ட்டாங்க என்று சொல்லி ஆரம்பித்தவர்கள் ஆனால் இவர்கள் எத்தனை பிரிவுகள்.

  இதுல யார் சமுதாய மக்கலை கூர் போட்டார்கள் என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் சமுதாயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எல்லாரும் ஒன்று சேரும் வரை யாருக்கும் ஓட்டு போடக்கூடாது இவர்களை எப்படி சமுதாய அமைப்புகள் என்று சொல்லுவது.

  இவர்கள் தான் இஸ்லாத்தில் உள்ள குழப்பவாதிகள் இவர்கள் இஸ்லாத்த்துகாக எதுவும் இதுவரை செய்யவில்லை.

  இன்ஷா அல்லாஹ் சகோதரர் உவைசி இங்கு வந்தாவது ஒற்றுமை வரட்டும்.

  புகாரி தம்மாம்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது