ஒற்றுமையோடு இருந்தால் மட்டும் போதுமா! அதில் உண்மை இருக்க வேண்டாமா?பரவாயில்லையே, என்னுடைய “வாட்ஸ்அப் குரூப் மேஸ்சேஜெய் பார்த்த அனைவரும் வந்து விட்டீர்களே, உங்கள் எல்லோருக்கம் அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்).

குரூப் அட்மின் அவர்களே, என்ன விஷயம் காலங்காத்தாலே அவசர அழைப்பு. பல இடங்களில் நடக்கின்ற குழப்பங்களை போய் பார்க்கலாம் என்று இருந்தோம். உங்களுடைய அழைப்பை பார்த்ததும் பறந்தோடி வந்து விட்டோம்.

இங்க பாருங்க, உலகத்திலே என்னன்னம்மோ, ஏதேதோ! நடந்து கொண்டிருக்கு, அதையெல்லாம் போய் வேடிக்கை பார்க்க நமக்கு இது நேரம் இல்லை.

இந்த உலகத்தில் நம்முடைய ஒற்றுமையைத்தான் ஆறறிவு படைத்த மனிதன் உதாரணமாக எடுத்துக்கொண்டு, கதை கதையாக பேசி வருகின்றானே தவிர...............!!??.  

ஆகவே, இங்கு நான் சொல்லப்போவதை கவனமாக கேளுங்கள், எந்த சூழ்நிலையிலும் நமக்குள் எந்த ஒரு பாகுபாடும் மன கசப்பும் வந்திரக்கூடாது. அதேசமயம் நாம் எல்லோரும் ஒரு ஆள் தலைமையின் கீழ் ஒற்றுமையாக உண்மையாக செயல்படனும்.

நமக்கு, எல்லாம் வல்ல இறைவனிடத்தில் நல்ல பெயர் கிடைத்தால் போதும், இந்த உலகத்தில் யாரும் எதுவும் சொல்லட்டும். மற்றவர்களைப் பார்த்து நாம் ஏங்கக் கூடாது.

என்றாலும் கூட, நம்முடைய உண்மையான ஒற்றுமையைக் கண்டு மற்றவர்கள் எல்லோரும் ஆச்சரியப்படணும். இதை நாம் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளணும். சகோதரர்களே, புரியுதா?

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது