நம்ம தொகுதியில் மல்லுகட்ட போவது யார்???

சசிகலாவின் உறவினரான பண்ணவயல் பாஸ்கர்; பேராவூரணி அல்லது பட்டுக்கோட்டை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் களமிறங்குவார் என, கூறப்படுகிறது. அவரை எதிர்த்து, தி.மு.க.,வில் நிற்கப்போவது யார் என்பது தான், டெல்டா மக்களின் கேள்வியாக உள்ளது.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் சம்பந்தி, பண்ணவயல் பாஸ்கர். இவர், ஜெ., பேரவை முன்னாள் மாவட்ட செயலர். தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி தொகுதிகளான, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணியை, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதே, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் வழக்கம்.இம்முறை, இரு தொகுதிகளிலும் போட்டியிட, பாஸ்கர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால், அ.தி.மு.க., போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இரண்டில் ஒன்று, அனேகமாக பேராவூரணி தொகுதியில், அவர் போட்டியிடுவார் என, கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.அவர் களமிறங்கினால், அவரை எதிர்த்து, தி.மு.க.,வில் நிற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துஉள்ளது.

பேராவூரணி தொகுதியில், பண பலத்தில் பழஞ்சூர் செல்வமும், மக்கள் செல்வாக்கில், பேராவூரணி பேருராட்சித் தலைவர் அசோக்குமாரும் களத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவர், தி.மு.க., சார்பில் களமிறங்குவார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பட்டுக்கோட்டையில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களில், மாளியக்காடு ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாதுரை, கிழக்கு ஒன்றிய செயலர் பார்த்திபன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என, தெரிகிறது.

தினமலர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது