உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு காலாவதியான பொருட்கள் பறிமுதல்உணவகங்கள், பெட்டிக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சோதனை
தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராஜ்குமார், ரங்கநாதன், குமார், கவுதமன், கார்த்திக், வடிவேல், ராமநாதன், விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள டீக்கடை, பெட்டிக்கடை, குளிர்பான கடை, மளிகைக் கடை, உணவகங்கள் ஆகியவற்றில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான பிஸ்கட் பாக்கெட், குளிர்பானம், அழுகிய பழங்கள், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் கலப்பட பொருட்கள், முந்திரி தோல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கடை உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. 

நடவடிக்கை
இது குறித்து நியமன அதிகாரி ரமேஷ்பாபு நிருபர்களிடம் கூறும்போது, உணவு பாதுகாப்புத்துறையில் வியாபாரிகள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தொற்றுநோய் இல்லாதவராக இருக்க வேண்டும். தயாரிப்பு தேதி, தயாரிப்பாளரின் முகவரி இல்லாத எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்றவற்றையும் விற்பனை செய்யக்கூடாது. அப்படி மீறி விற்பனை செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். அடுப்பு எரிப்பதற்காக முந்திரி தோல் பயன்படுத்தும் போது பணியாளர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதால் கண்டிப்பாக அதை பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் உணவு பொருட்கள் வாங்கும்போது காலாவதியான பொருட்களா? என்பதை பார்த்து வாங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது