வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் சுப்பையன் ஆய்வுதஞ்சையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் சுப்பையன் நேற்று ஆய்வு செய்தார்.

சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் இருந்து வருகின்றன.இந்த நிலையில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆசிய கட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் அமைக்கப்படுகிறது. இதனை கலெக்டர் சுப்பையன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு மையம்
பின்னர், திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான அறையினையும், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளர்களின் வரவு செலவு கணக்கு சரி பார்க்கும் பிரிவு, வாக்காளர் சேவை மையத்தினையும் கலெக்டர் சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து திருவிடைமருதூர் தாலுகாவில் தேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தினையும், திருபுவனத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தினையும், பார்வையிட்டு வாக்குப்பதிவு மையம் அமைப்பதற்கான இடங்களையும் கலெக்டர் சுப்பையன் பார்வையிட்டார். அப்போது வாக்குப்பதிவு மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளான குடிநீர் வசதி, மின் வசதி, முதியோர்களுக்கான சாய்வு தளம் வசதி, போன்ற அடிப்படை வசதிகள் அமைக்க தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

உடனிருந்தவர்கள்
இந்த ஆய்வின் போது கும்பகோணம் உதவி கலெக்டர் கோவிந்தராவ், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், திருவிடைமருதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கங்காதரன், தாசில்தார்கள் தங்கபிரபாகரன் (தஞ்சை), குமார் (திருவிடைமருதூர்), செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது