அதிரையில் ஏலம் நடைபெறுமா???1000 கேள்வியுடன் நகரும் நாள்

அதிரை நகர பேருந்து நிலையத்தில் இருக்கும் 24 கடைகளை ஏலம் மூலமாக வடைகைக்கு விட வரும் 03.03.2016 தேதி பேரூர் வளாகத்தில் நடைபெற உள்ளது .அதற்க்கு வைப்பு தொகையாக  ரூபாய் 10,0000 கொடுத்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தது பேரூர் மன்றம்  அறிவிப்பை தொடர்ந்து  அதிரையில் இருக்கும் வியாபாரிகள் ,புதிதாக தொழில் தொடங்கும் நபர்கள் ஏராளமானோர் ஏலத்தில் கலந்து கொள்ள வைப்பு தொகை செலுத்தி உள்ளனர் .

ஆனால் மக்களின் நலன் கருதி நடக்க இருக்கும் ஏலத்தை தடுத்து நிறுத்த மெழுகுவர்த்தி கட்சியை  சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சேர்மன் அஸ்லம் அவர்களின் எதிரணியை சேர்ந்த ஆதவன் கட்சி உறுப்பினர்கள்ஒன்று இணைந்து ரகசியமாக மன்ற உறுப்பினர்கள் வீட்டிற்க்கு சென்று   கையழுத்து வேட்டை நடத்தி தீர்மானம் இல்லாமல் நடக்கும் ஏலம் என்று கூறி ஏலத்தை நிறுத்த ஏற்பாடு செய்வதாக கூறபடுகிறது. 

மேலும் சென்ற பேரூர் மன்ற ஆட்சி வரை ஆதவன் கட்சியை சேர்ந்த பிரமுகருக்கு கடைகள் ஒதுக்கபட்ட தாகவும் அதனை மீண்டும் தமக்கே  ஒதுக்க வேண்டும் எனவும் ஆதரவானவர்களை  வைத்து கொண்டு போராடி வருகிறாராம் .அதை போல் மற்ற கடைகளை புதியவர்களுக்கு கொடுக்காமல் எங்களுக்கே தரவேண்டும் என முன்னால் கடை ஒப்பந்தகாரர்களில் வாரிசுகள் பொங்கி எழ ஆரம்பித்து விட்டனராம் .ஏலம் நடந்தால் எல்லாம் கைவிட்டு போகிவிடும் மேலும் தேர்தல் நெருங்கி வருவதால் எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என ஒரு கூட்டணி அமைத்து கையழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள் .குறிப்பாக ஆதவன் கட்சியை சேர்ந்த பிரமுகரும்  ஒரு  வார்டு உறுப்பினரும் தனது லெட்டர் பேட் வைத்து  தீவிரமான முறையில் ஏலத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார் களாம், 

அதற்க்கு பக்கபலமாக மெழுகு வர்த்தி  கட்சி  உறுப்பினர்கள் . அரசு ஒதுக்கப்பட்ட கடைகளை  யார் வேண்டுமானாலும் ஏலம் மூலமாக எடுக்கலாம் என்று சட்டம் இருக்கும் பொழுது பேரூர் மன்ற உறுப்பினர்களே மக்களின் நலனை பார்க்காமல் எந்த அடிப்படையில்  ஏலத்தை நிறுத்துகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு கேள்வியாய் இருக்கிறது .நமது நோக்கம் தான் முக்கியம் என்று  ஏலத்திற்கு தடையாக நிற்பார்களா ? அல்லது மக்களின் நலனை கருதி ஏலத்திற்கு துணை போவார்களா அதிரை பேரூர் மன்ற உறுப்பினர்கள் ?  பொறுத்திருந்து பார்போம்  
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது