சென்னை மாநாட்டிற்கு புறப்பட்ட அதிரையினர்?மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிமுன் அன்சாரி உருவாக்கியுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை அதிமுகவுக்கு அளித்துளளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் இந்த அறிவிப்பை பிரகடனம் செய்கிறார் கட்சித் தலைவர தமிமுன் அன்சாரி

இன்று மாலை மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். வக்பு வாரிய தலைவர் தமிழ் மகன் உசேன்தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுபார்வர்டு பிளாக் கதிரவன்காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான்மனித நேய ஜனநாயக கட்சியின் பெங்களூர் தலைவர் முக்தார் அகமது உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

இதற்காக அதிரை கிளையில் இருந்து இரண்டு வாகனங்களில் நேற்று இரவு அஸ்கர் மற்றும் செல்ல ராஜா தலைமையில் மக்கள் புறப்பட்டனர். தகவல்: பைசல்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது