தஞ்சையில் லாரி மோதி விவசாயி சாவுதஞ்சையில் லாரி மோதி விவசாயி இறந்தார்.

விவசாயி சாவு

தஞ்சை வெண்ணாற்றங் கரை சுங்கான்திடல் பெரியதெருவில் வசித்து வந்தவர் முருகையன் (வயது65). விவசாயி. இவருக்கு சொந்தமான வயல் அதே பகுதியில் உள்ள பைபாஸ் சாலை அருகே உள்ளது. நேற்றுமுன்தினம் வயலுக்கு சென்ற முருகையன் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, முருகையன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் இறந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது