ஜெர்மனி நாட்டவர் சைக்கிளில் அதிரை வருகை!ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் ஹைனா, சிறுவயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட இவர் ஜெர்மனியிலிருந்து சைக்கிளில் உலகம் முழுவதும் சுற்றிவருகின்றார். அதில் ஒருபகுதியாக பல நாடுகளை கடந்து நேற்று வேளாங்கண்ணி வழியாக ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்தவர் அதிரையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இவரை அதிரை உபயா மற்றும் 8வது வார்டு பேரூராட்சிமன்ற உறுப்பினர் ஹாஜா முகைதீன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர்.

மேலும் இதுகுறித்து அதிரை உபயா தனது முகநூல் பக்கத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் " இன்று ஒரு விசித்திர மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது தோற்றமும் சைக்கிளும் அதில் இருந்த மூட்டை முடிச்சுகளும் அவரை பற்றி பேசி தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். சொல்லசொல்ல வியப்பில் புருவம் உயர்த்தினேன். அவர் பெயர் ஹைனா. ஜெர்மனியை பூர்வீகமாக கொண்டவர். சைக்கிள் ஓட்டுவதில் சிறுவயதிலிருந்தே மிகுந்த விருப்பம் கொண்டவர். ஜெர்மனியில் சுற்றாத இடமில்லை. ஆனாலும் அவரின் சைக்கிள் ஓட்டும் தாகம் தீரவில்லை. உலகம் முழுமையும் சைக்கிளிலேயே சுற்ற எண்ணினார். 
பலவாறான நிலங்கள், மனிதர்கள், கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் துளிர்விட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு சைக்கிளை எடுத்து கிளம்பிவிட்டார். 
ஜெர்மன் இன்னும் சில நாடுகளையும் சுற்றி இந்தியா வந்து சேர்ந்தார். 
இதுவரை 9000 கிலோ மீட்டர்களை சுற்றி வந்தவர் தமிழகம் வந்தடைந்து வேளாங்கன்னி வழியாக இராமேஸ்வரம் செல்லவந்தவரை அதிரையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உழைக்கும் வயதில் ஊர் சுற்றும் இன்றைய சோம்பேறி இளைஞர்களுக்கு மத்தியில், உழைத்த பிறகு ஓய்வெடுக்கும் வயதிலும் உழைத்த பணத்தை வைத்து மனசந்தோசத்திற்காக உலகம் சுற்ற கிளம்பிய 50 வயது கிழமானாலும் இளைஞரான ஹைனாவை பார்க்கும்போது ஆச்சர்யமே மிஞ்சியது." என குறிப்பிட்டுள்ளார்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது