கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மர்ம சாவு



கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சர்ரே என்ற இடத்தில் கடந்த 11-ந் தேதி ஒரு கார் விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காரை ஓட்டி வந்த நபர், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அவரைமீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். அவரது காயங்கள் தற்செயலாக நடந்த விபத்தினால் ஏற்பட்டதுதானா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. யாரோ அவரை கொலை செய்ய திட்டமிட்டு இந்த விபத்தை நடத்தி இருக்கலாமோ என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் தானோவா என்றும் தெரிய வந்துள்ளது.

அவர் போதைப்பொருட்கள் வர்த்தகத்தில் தொடர்பு உள்ளவர் என தகவல்கள் கூறுகின்றன.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது