அதிரை வார்டு மக்களுக்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்த மமக, திமுக,காங்கிரஸ் உறுப்பினர்கள்

அதிரை பேருராட்சிக்கு உட்பட்ட 10,17,19 ஆகிய வார்டுகள் பேரூர் நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதாகவும் புதுமனை தெரு,மேலத்தெரு ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல் இருப்பதாக கடந்த பல வருடங்களாக மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களான  ரபீக்கா முஹம்மது சலீம் 17 வது வார்டு மற்றும் செளதா அஹமது ஹாஜா 19 வது வார்டு ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர், கடந்த 12 ஆம் தேதி தங்களது வார்டுகள் தொடர் புறக்கணிப்பை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்த நிலையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை ஒன்றை வைத்து உள்ளனர். 

மேலும் தங்களுடைய வார்டுகளின் தேவைகளை அதிரை பேரூர் நிர்வாகம் விரைவில் செயல்படுத்தவும் மனித நேய மக்கள் கட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோரை சந்தித்து மனுக்களை வழங்கினர்.மேலும் காங்கிரஸ் உறுப்பினர் ஜபுருன் ஜமீலா சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள  சுகாதார வளாகத்தை  10 ஆம் வார்டு மக்களின் பயன்பாற்றிக்கு திறக்க வலியுறுத்தி மனுக்கள் வழங்கப்பட்டது.அது போல் திமுக உறுப்பினர் உம்மல் மர்ஜான் அன்சர்கான் சார்பில் போஸ்ட் ஆபிஸ் தெரு பகுதியில் ரோட்டில் செல்லும் கழிவு  நீரை முறையாக வாய்கால் அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

6 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. தி.மு.க.நரகம் துனை செயலும் மற்றும் 14 வார்டு கவுன்சிலர்கலும் சேர்ந்து நாளை நடைபெறவுள்ள ஏலத்தை தடுக்கும் நோக்கில் சென்றதாக ஊருக்குள் செய்திகள் உலாவருகிறது மெய்யாலுமே

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. இவர் கலை பார்த்து பரிதப படுங்கள் வார்டு கவுன்சிலர்கள்
  நாளை நடைபெறவுள்ள ஏலத்தை தடுக்கும் நோக்கில் சென்றதாக ஊரில் செய்திகள் உலாவருகிறது மீண்டும் பரிதப படுங்கள் இவர் கலை நினைத்து

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது