பார்த்து போங்க பக்தர்களே...


நாகூர் தர்காவில் 459வது கந்தூரி விழா கடந்த 10ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது . இதனை தொடர்ந்து இன்று கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது . 

இதற்காக அலங்கரிக்கப்பட்ட  சந்தன கூடு (தேர்) நாகப்பட்டினத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக  தர்காவை வந்தடையும் . 

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  அதன்படி இன்று நடைபெற உள்ள கந்தூரி விழாவில கலந்து கொள்வதற்காக  அதிரை இளைஞர்கள்  இரண்டு சக்கர வாகனங்களில் அதிகளவில் செல்வதை காண முடிகிறது. 

இவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் நாகூர் அருகே உள்ள வாஞ்ஜுர் பகுதிக்கு சென்று விட்டு தான் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த கந்தூரி விழாவிற்காக  புதுசேரி மாநில மதுபான கடைகள் இரவு நேர சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக திட்டசேரியை சேர்ந்த நண்பர் பாருக் கூறுகின்றார். அவர் மேலும் கூறுகையில், வாஞ்ஜுரில் உள்ள கடைகளில் இரவு விடிய விடிய மதுபான விற்பனை அமோகமாக நடைபெறும் என்றும் இதற்க்கான சிறப்பு அனுமதியை அம்மாநில அரசு மதுபான விற்பனை கூடங்களுக்கு வழங்கியுள்ளது என்றார் கவலையாக. 

இரவு நேரங்களில் குடித்து விட்டு வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து மரணம் வரையில் செல்கின்றனர். 
இதனை தடுக்க தவ்ஹீது இயக்கங்களின் பணி இப்பகுதியில் தீவிரபடுத்த வேண்டும் என்றார்.
Share:

2 comments:

 1. Oruvealai
  entha seaithe
  potdavar. Thanne
  aadeththu erupparow

  ReplyDelete
 2. Capttan ellatha kappal
  adirai xpress

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது