அதிரையில் கடும் வெயில்! வெறிச்சோடிய சாலைகள்!


தமிழகத்தில் கோடைவெயில் காலம் துவங்குவதற்கு முன்பே அதிரையில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டிவதைக்க துவங்கிவிட்டது. இதன் காரணமாக பிரதான சாலைகள் கூட பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி போய்விட்டன. மேலும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கடும் வெயில் காரணமாக தென்னதோவைகளை நிழலுக்காக வெட்டியெடுத்து பயன்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து சென்னையிலிருந்து அதிரைக்கு வந்துள்ள முகம்மது அவர்கள் கூறுகையில் " சென்னையை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதினால் சாலைகள் பெரும்பாலும் நிழலாக காட்சியளிக்கும் இதனால் நேரடியாக வெயிலின் தாக்கத்தை உணரமுடியாது. ஆனால் அதிரையில் சாலைகளில் நிழலை காணவேமுடியவில்லை ஏற்கனவே நிழல் தந்துகொண்டிருந்த மரங்களும் வெட்டப்பட்டு இருக்கின்றன." என்றார். 

அதிரையில் வாட்டிவதைக்கும் கடும்வெயில் காரணமாக அங்காங்கே குளிர்பான கடைகளும் துளிர்விட துவங்கிவிட்டன.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது