நன்னெறி மீதெம்மை நடத்துவாயாக !!!

நன்னெறி மீதெம்மை நடத்துவாயாக !!!
அலகிலா அருளும் அளவிலா அன்பும் 
இலகுமோர் இறையின் இனிய பேர் போற்றி
உலகெலாம் படைத்து உயர்வுரக் காக்கும் 
புலமையோன் தனக்கே புகழேலாம் உரிய

அலகிலா அருளும் அளவிலா அன்பும் 
இலகுமோர் இறையே இனிய பேர் இறையே 
முடிவு நாள் அதனின் முழு முதல் அரசே 
அடியேன் யாம் உன் அடியினை தொழுவோம் 

உன் பால் அன்றோ உதவியை நாடுவோம்
நன்னெறி மீதெம்மை நடத்துவாயாக 
நின்னருள் பொழிந்தே நேயர் தம் நெறியில்
நிர்கதம் கொண்டோர் நெறியினில் பிறழ்ந்தோர் 

செல்நெறி அன்றது செந்நெறி அன்றோ...ஆமீன் .

தகவல்: வா. முஹம்மது இப்ராகிம், அதிரை.
(சூரத்துல் பாத்திஹாவின் தமிழ் மொழியாக்கம் கவிதை நடையில்)
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது