பராசக்தி காலம் முதல் ஃபேஸ்புக் காலம் வரை... கருணாநிதி

சன்னுக்கு ஏது சன்டே என்று விவேக் ஒரு படத்தில் வசனம் சொல்லுவார். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திமுக தலைவர் கருணாநிதிக்கு பொருந்தும். அந்த அளவிற்கு திமுகவினர் சொல்வது போல ஓய்வறியா சூரியன்தான். அதை பாராட்டும் வகையில் இன்றைக்கு கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளனர்.

தற்போது தமிழக அரசியலில் இருக்கும் ஒரே மூத்த தலைவர் மு. கருணாநிதி தான். தனது 92 வயதிலும் தமிழக அரசியலில் இருந்து ஓய்வு பெறாமல் உழைத்து கொண்டிருக்கிறார். அரசியல் மட்டுமின்றி சினிமா துறையிலும் அவர் பங்கு ஈடு இணையற்றது.

பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அறிமுகமாகி, கருணாநிதி எழுதிய வசனங்களை சிறப்பாகப் பேசி நடித்தார். இந்தப்படத்தின் வசனங்கள் பெறும் வரவேற்பைப் பெற்றது.

அன்று பெரியார், அண்ணா போன்ற தலைவர்களுடன் இணைந்தும் , ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், பக்தவச்சலம் போன்ற தலைவர்களுக்கு எதிராகவும் அரசியல் செய்தவர் கருணாநிதி.

தலைமுறைகள் கடந்தும் இன்றைய விஜயகாந்த் வரை அவர் தனித்துவத்தோடு நாகரிகமாக அரசியல் செய்பவர் திமுக தலைவர் கருணாநிதி.

சமூக வலைதலங்களிலும் அவர் நாள்தோறும் தனது பதிவுகளை வெளியிட்டுதான் வருகிறார். ஆனால் இதிலும் நெட்வாசிகள் அவரை விட்டுவைக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வரும் கமெண்டுகளுக்கு தனக்கே உரித்தான பானியில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் அவர்.

செய்தியாளர்களின் கடினமாக கேள்விகளுக்குக் கூட எப்படி நாசூக்காக பதிலளிப்பார் கருணாநிதி என்று நினைவு கூர்கிறது அந்த வீடியோ. சமீபத்தில் விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு பழம் கனிந்து கொண்டிருக்கிறது பாலில் விழும் சொன்னவர் கருணாநிதி.

அன்று பராசக்தி முதல் இன்று பேஸ்புக் வரை தனது அறிவை எப்படி அப்டேட் பண்ணி இருக்கிறார் என்பதை நினைத்தாலே நமக்கு அவருடைய அனுபவங்கள் தான் தெரிகிறது.

அந்த வீடியோவை நீங்களும் பாருங்களேன்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது