நன்னெறி மீதெம்மை நடத்துவாயாக...இறைவா !

நன்னெறி மீதெம்மை நடத்துவாயாக...இறைவா !

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனிய பேர் போற்றி 
உலகெலாம் படைத்து உயர்வுரக் காக்கும் 
புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய..

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையே இனிய பேர் இறையே 
முடிவு நாள் அதனின் முழு முதல் அரசே  
அடியேன் யாம் உன் அடியினை தொழுதோம் 

உன் பால் அன்றோ உதவியும் நாடுவோம்
நன்னெறி மீதெம்மை நடத்துவாயாக 
நின்னருள் நேயர் தம் நெறியில் 
நிர்கதம் கொண்டோர் நெறியினில் பிறழ்ந்தோர் 
செல் நெறியன்றது செந்நெறி யன்றோ ..ஆமீன் 


குறிப்பு:- இக்கவி வரிகள் வேறு ஒன்றும் அல்ல, நம் இறைவேதம் அல் குர் ஆனின் முதல் பக்கத்தில் உள்ள சூரத்துல் பாத்திஹாவின் தமிழ் பெயர்ப்பாகும்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---






Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது