அதிரை ஆண்களே, உணவுப் பொருட்களை பயன்படுத்தி சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கமுடியும்.

அதிரை ஆண்களே, நீங்கள் உள்ளூரிலோ, அல்லது வெளியூர் அல்லது அயல்தேசத்திலோ பணியில் இருக்கும்போது அதிகம் வெளியிலில் அடிபடுவது சகஜம். அதிலும் அதிரை ஆண்கள் வெயிலுக்கு சளைத்தவர்கள் இல்லை என்றாலும், இந்தக் கடுமையான கோடை காலத்தில் ஒரு சில சரும பாதுகாப்புகள் உங்களுக்கு தேவை.

தேவை ஏற்பட்டால் இதை பெண்களும் உபயோகித்து பார்க்கலாம்.

இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான ஒரு சில முறைகளை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.


தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.


தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.


தக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் கூடும்.


உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.


பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது