இந்தாண்டு அதிக வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் – சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தகவல்இந்தாண்டு அதிகமாக வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுசூழல் உயிரி அறிவியல் மற்றும் அதன் சாதணைப்பயன்பாடுகள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் உயிரி அறிவியல் மற்றும் அதன் சாதனைப் பயன் பாடுகள் எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சி.சுவாமிநாதன் பேசியதாவது :

எதிர்வரும் காலத்தில் சுற்றுச்சூழல் வெப்பமயமாதல் காரணமாக அதிகமாக வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும். உலகின் மக்கள் தொகை 702 கோடி என்பது 2050-ம் ஆண்டில் 902 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நிலம், நீர், காற்று மற்றும் ஏனைய இயற்கை வளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சிக்கல்களை உருவாக்குகிறது. புவி வெப்பமய மாதல், ஆற்றல் பற்றாக்குறை, அதிகப்படியான உணவுத்தேவை, பாதுகாப்பு, மண்வளம், காலநிலை மாற்றம், உயிரினங்களின் அழிவு மற்றும் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் போன்றவை தற்காலச் சூழலின் சவால்களாக முன்நிற்கிது.

பிரேசிலில் பதிவாகியுள்ள ஏறத்தாழ 3 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர்வானது 80 விழுக்காடு கொசுக்களின் பரவலுக்கும், “சிகாவைரஸ் போன்ற புதிய நோய்கள் பரவுவதற்கும் முக்கியக் காரணியாக அமைந்திருக்கிறது என கண்டறியப்பட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு உயர்ந்த அளவில் வெப்பநிலை உலகெங்கிலும் காணப்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியுள்ளது. 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ஆற்றல் தேவைகள் நிலக்கரியின் மூலம் பெறப்படுவதால் சூழல் மாசுபாடு அடைவதோடு புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது.

இந்தியாவில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தறுவாயில் உள்ளதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன. மேற்கண்ட சூழல் சவால்களை எதிர்கொண்டு சூழல் மண்டலங்களைக் காப்பதற்கு பல்துறை ஆராய்ச்சி இன்றியமையாததாக விளங்குகிறது. அதனை முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறினார். இக்கருத்தரங்கில் ஐதராபாத் பல்கலைக்கழக பேரசிரியர் மற்றும் ஆராய்ச்சி, முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டார்கள். 

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது