ஐயா, இது தேர்தல் நேரம், குடும்பங்கள் பாதுகாக்கப் படனும்.குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும்.

பல சமுதாயங்களில், குடும்பம் என்பது இரத்த உறவு தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "இரத்த உறவு" என்பது ஒரு உருவகமாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது."

கணவன்  மனைவி தொடர்பு, பெற்றோர்  பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையிலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன.

மணவழிக் குடும்பம்.
ஒரு குடும்பம் உருவாவதற்குரிய மிக அடிப்படையான தேவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து  கொள்வதாகும்.

இவ்வாறு இருவரும் கணவனும் மனைவியும் ஆகி அமைக்கும் குடும்பமே மணவழிக் குடும்பம் (Conjugal Family) ஆகும்.

கணவன் மனைவியையும் அவர்களது சொந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும் கொண்டதாக இக்குடும்பம் அமையும். திருமண உறவு முக்கியத்துவமானதாக இருக்கும்.

தனிக்குடும்பம்.
கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக்குடும்பம் அல்லது தனிக்குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது.

தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.

விரிந்த குடும்பம்.
கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது.

விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம்.


இன்றைய காலக் கட்டத்தில் பல அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், அரசியல் சாராத கட்சிகள் என உருவாகி இருக்கின்றது.

இதில் வியப்பு என்ன வென்றால், ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் வெவேறு கட்சிகளில் இருப்பதுதான். முன்பெல்லாம் ஒரு குடும்பத்தின் தலைவன் தந்தை எந்த கட்சியோ மற்ற எல்லோரும் அதே கட்சியை தழுவி இருப்பார்கள்.

தற்போது அப்படி இல்லைங்க. ஒரு குடும்பத்தில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் குடும்பங்கள் சிதறாமல் இருக்கணும்.


K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது