அடிப்படை வசதி செய்ய மறுக்கிறது ஆளும் அரசு -அதிரை சேர்மன் போராட்டம்

அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.இது குறித்து நாம் விசாரித்த வகையில் கடந்த ஆண்டு பம்பிங் மூலம் அதிரையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது .

அதில் அதிரை நகருக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் இடமாக திகழ்கிறது காட்டு குளம் .இக்குளத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணியை செய்ய அரசு அதிகாரிகள் தாமதம்  செய்கிறார்கள் . அதனை தொடர்ந்து மேலத்தெரு பகுதிகளில் முறையான தண்ணீர் விநியோகம் இல்லை எனவும் இதற்க்கு தீர்மானம் செய்தும் அரசு பணிகளை செய்து தர மறுக்கிறது .

மேலும் போஸ்ட் ஆபிஸ் ரோடு கால்வாய் பணிக்காக நிதி ஒதிக்கியும் அரசு பணி ஆணையை செய்து தரவில்லை .இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளகுவாதகவும் மேலும் எனது நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார் .இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து தீர்வு காண வேண்டும் எனவும் அது வரை பேரூர் மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் அஸ்லம் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார் .அவருக்கு ஆதரவாக  50க்கும் மேற்ப்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் . 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது