அதிரையர்களே உங்கள் வீட்டில்......!?!?..........?!?!.....!?


அதிரையர்களே,
உங்கள் வீட்டில் சமையல் கேஸ் இருக்கா!
உங்கள் வீட்டில் கேஸ் அடுப்பு இருக்கா!!
உங்கள் வீட்டில் இன்டர்நெட் இணைப்பு இருக்கா!!!
உங்கள் வீட்டில் ஐபோனை உபயோகப்படுத்துகிறார்களா?

உங்களுக்கு தெரியுமா? நடுவானில் வெடித்து சிதறிய ஐபோன், கதிகலங்கிய விமான பயணிகள்.!!

ஜஸ்ட், ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்க வேண்டும்.

அவ்வப்போது ஐபோன் கருவிகள் வெடித்து சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவது ஒன்றும் புதிதல்ல. சில முறை பயனர்களின் கவன குறைவினாலும், சில முறை கருவியில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் ஐபோன்கள் வெடித்திருக்கின்றது.

இன்றைய காலக் கட்டத்தில் ஐபோன் இல்லாதவர்கள் எதையோ இழந்தது போல் கருதுகின்றனர், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஐபோன் ஒரு இன்றியமையாத உபகரணமாக இருக்கின்றது. ஐபோன் உபயோகத்தில் எல்லோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக பெண்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும், காரணம் சமையல் அறையில் சமைத்துக் கொண்டு இருக்கும்போது ஐபோனினால் உங்கள் கவனம் சிதறும்.

நீங்கள் அடுப்பில் அப்போதுதான் ஏதாவது ஒரு உணவை சமைக்க வைத்து இருப்பீர்கள், அந்த நேரம் பார்த்து உங்களுக்கு குரூப் மெஸ்சேஜ் வரும். சில நேரம் சமையல் ERIVAAU வாயு கசியலாம், ஆனாலும் உங்களுடைய முழு கவனமும் அந்த குரூப் மெஸ்சேஜ் மேலேயே இருக்கும்.     

அதிர்ச்சி:
ஐபோன் வெடிப்பு சம்பவங்கள் பெரும்பாலும் பயனர்களின் வீடு, தோட்டம், அலுவலகம் என எங்கு நடந்தாலும் அவர்களுக்கு மட்டும் தான் பிரச்சனை, ஆனால் நடுவானில் பறக்கும் விமானத்தில் ஐபோன் வெடித்ததால், அதில் பயணம் செய்த சுமார் 163 பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஐபோன் 6:
வாஷிங்டன் நகரின் பெல்லிங்ஹம் நகரில் இருந்து ஹவாய் நோக்கி பறந்து கொண்டிருந்த அலாஸ்கா ஏர் விமானத்தில் ஐபோன் 6 கருவி திடீரென வெடித்து சிதறியது விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்னா கிரெயில் என்பவர் பயன்படுத்திய ஐபோன் கருவி வெடித்ததில் கருவியில் உடனடியாக தீப்பிடித்தது.

கருத்து:
'ஐபோன் கருவியில் படம் பார்த்து கொண்டிருந்தேன், திடீரென கருவி வெடித்து அதில் இருந்து சுமார் 8இன்ச் அளவுக்கு தீ பரவியதும், அதனினை தரையில் போட்டு விட்டேன்', என கிரெயில் தெரிவித்திருந்தார்.

ஹோனோலுலு:
ஐபோன் வெடிக்கும் போது விமானம் பசிபிக் கடலில் ஹோனோலுலு என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தது. வெடித்த ஐபோன் கருவியின் தீ உடனடியாக அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன் எச்சரிக்கை:
விமான பயணங்களின் போது கருவியை ஏர்பிளேன் மோடில் வைப்பது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உதவும். இது குறித்து கருத்து தெரிவிக்க ஆப்பிள் மற்றும் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

அதிரையர்களே, நீங்கள் விமானத்தில் பயணமானாலும் சரி, பேருந்தில் பயணமானாலும் சரி, உங்கள் ஐபோனை ஆப் செய்து விடுங்கள்.

பேரூந்திலோ, ஆட்டோவிலோ, பயணமானால் ஐபோனையும் உங்கள் வாயையும் ஆப் செய்து விடுங்கள். எதுவும் பேச வேண்டாம், அழைப்பு வந்தால் கட் செய்துவிட்டு எஸ்.எம்.எஸ். செய்து விடுங்கள்.

ஆனால் கல்யான கூப்பாடுக்கு போகும்போது ஒரு ஓரமாக நின்று மெதுவாக பேசுங்கள்.

வீட்டில் இருக்கும்போது அழைப்பு வந்து பேசும்போது சார்ஜ் இணைப்பை எடுத்து விட்டு, அதாவது துண்டித்து விட்டு பேசுங்கள்.

இது கொஞ்ச நேர கஷ்டமாக இருந்தாலும், நீண்ட நேர  நிம்மதியை தரும்.     K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது