அதிரை அருகே சிலின்டர் ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்தால் பரபரப்பு

பட்டுக்கோட்டை-அதிரை சாலையில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்றுகொண்டிருந்த டெம்போ லாரி ஆர்கேபி அருகே சென்றபொழுது டெம்போவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீபிடித்து எறிந்தது. மேலும் தீயை அணைக்க தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தும் நீண்டநேரமாகியும் வராத நிலையில் டெம்போவின் டயர் பலத்த சத்தத்துடன் வெடித்து செதரியது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோந்து போலிஸார் தீயணைப்பு துறைக்கு மீண்டும் தகவல் கொடுத்தனர். இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Share:

1 comment:

  1. சம்பவம உண்மை,தகவல்கள் சரியல்ல.வாகனம் நிலை தடமாறவும் இல்லை,கவிழவும் இல்லை்.வயரிங்கில் ஏற்பட்ட மின் கசிவினால் மெதுவாக புகையத் தொடங்கி பின் எரிந்த்தால் டயர் வெடித்தது,சம்பவத்தை ஆரம்பம் முதல் நேரில் பார்த்து இதை பதிவிடுகின்றேன். தயவு செய்து சரியான தகவலை வழங்கவும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது