மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் இந்தியாவி்ன் அதிவேக ரெயில் 'கதிமான் எக்ஸ்பிரஸ்'; வரும் 5-ந்தேதி அறிமுகமாக வாய்ப்புஇந்திய ரெயில்வே வரலாற்றில் புதிய உச்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும்  'கதிமான் எக்ஸ்பிரஸ்' அதிவேக ரெயில் வரும் 5-ந்தேதி முதல் பயணத்தை துவங்க உள்ளது.

ஆக்ரா முதல் டெல்லி வரை இயக்கப்படும் இந்த ரெயில் 184 கி.மீ தூரத்தை 105-110 நிமிடங்களில்  கடந்துவிடும். 12 ஏ.சி. பெட்டிகள், ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளை வரவேற்க 'ரெயில் பணிப்பெண்கள்', இலவச வை-ஃபை இண்டர்நெட், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல புதிய வசதிகளுடன் இந்த ரெயில் அறிமுகமாகிறது.

வரும் 5-ந்தேதி இந்த ரெயிலை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தனது அலுவலகத்தில் இருந்து ரிமோட் மூலமாக அறிமுகப்படுத்தி வைப்பார் என ரெயில்வே துறை சார்பாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது